மொத ராத்திரி இயக்குனருக்கு என்ன ஆச்சு? எல்லா மீம்ஸ்களிலும் செய்த செயல்.. இப்போ ட்ரெண்டே அவர் தான்!

  • சென்னை: தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் மொத ராத்திரி படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமி செய்த செயல் தான் சோசியல் மீடியாவில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. தன்னை பற்றியோ அல்லது தன்னுடைய படத்தை பற்றியோ வெளியாகும் மீம்ஸ்கள், போஸ்ட்களில் எல்லாம் அவர் லைக் மற்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்.

    Advertisement

    ஒரு சில படங்கள் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றாலும் ஓடிடிக்கு வந்த பிறகு அடிவாங்கிவிடும். அல்லது அந்த படத்தில் சில காட்சிகளை எல்லோரும் ட்ரோல் செய்வார்கள். ஆனால் சமீபத்தில் ஓடிடியில் வெளியான பிறகும் அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்களை பெற்று வரும் மொத ராத்திரி படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமி என்பது பலருக்கும் தெரியாது. அந்த படத்தின் நிதிஷ் என்று கேரக்டரில் சோப்லாங்கி என்று எல்லாராலும் கலாய்க்கப்படும் ஒரு நபராகத் தான் ராஜா கருப்பசாமி நடித்திருந்தார்.

    Advertisement

    மொத ராத்திரி பட கதை

    விருப்பமே இல்லாமல் நடக்கும் ஒரு திருமணத்தில் முதல் நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து தான் இந்த முழு படமே நகர்ந்தது. ஆனால் முதல் இரவு என்று பெயர் வைத்தாலும் படத்தில் எந்த ஆபாசமான கட்சிகளும் இல்லை என்பதால் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடிகிறது என்று பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். சமீப காலமாக வெளியாகும் பல படங்களில் ரத்தம் தெறிக்க, வில்லன் மிரட்ட, முகத்தை சுளிக்கும் அளவிற்கு ஆபாச காட்சிகளுடன் படம் வெளியாகி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த படம் ஒரு கல்யாண வீட்டு சண்டை சச்சரவை நேரில் பார்ப்பது போலவும், அதே நேரத்தில் சமூகத்தில் நடக்கும் சில அவலங்களையும் குட்டு வைத்தது போல நகர்ந்தது.

    Advertisement
    மொத ராத்திரி படத்தில் கட்டில் காட்சி கடைசியில் வைத்த காரணம் இதுதான்.. ஓபனாக சொன்ன இயக்குனர்

    இந்த படத்தை பற்றி ஒடிடிக்கு வந்த பிறகு அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் மீடியா முழுக்க பட காட்சிகள் படத்தின் பாடல்கள் குறிப்பாக நிதீஷ் கேரக்டர் அதிகமாக மீம்ஸ்களில் வலம் வருகிறது. இந்த மீம்ஸ்களுக்கு எல்லாம் நேரம் ஒதுக்கி இயக்குனர் ராஜா கருப்பசாமி லைக் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை வைத்தும் சிலர், ஐயோ கடவுளே என் நண்பன் கூட ஒரு நாளைக்கு 50 மீம்ஸ் தான் அனுப்புவான் ஆனா இவரு பொறுமையா உட்கார்ந்து அத்தனை மீம்ஸ்க்கும் லைக் கொடுக்கிறாரே? இவருக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கு? என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    கமெண்ட் கொடுக்க காரணம்

    இப்போது அவரே அதற்கு ஒரு வீடியோவில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துனது மீம்ஸ்களும், இன்ஸ்டாகிராம் போஸ்ட்களும் தான். அதனால் அவர்களுக்கு நான் நன்றி செலுத்தும் வகையில்தான் எல்லோருக்குமே லைக், கமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்துக்காக பல நாள் தூங்காமல் முழித்து இருந்திருக்கிறேன். இப்போ அந்த படத்தின் வெற்றியை எல்லாரும் கொண்டாடும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

    தூத்துக்குடி பையன்.. மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி யார் தெரியுமா?

    ரசிகர்கள் கருத்து

    நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த மாதிரி எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட், லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொடுப்பேன்.. என்று அவர் சொல்லி இருக்கிறார். படத்தில் இவரைப் பார்த்து இவன் யார்யா லூசு மாதிரி ஒருத்தன் வந்துட்டு போறான் என்று பலரும் திட்டி இருக்கலாம். ஆனால் அந்த படத்தை இயக்குனதே அதே நிதிஷ் கேரக்டரில் நடித்த நபர் தான் என்பது இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. அதிலும் அவருடைய சமீபத்திய பேட்டிகள் எல்லாம் பார்க்கும் போது இந்த மனிதனுக்குள் இத்தனை ஞானம்! என்று நினைக்க வைக்கிறது. இப்போ இவருக்கு பல ஃபேன்ஸ் கிளப் உருவாகி விட்டது.

    English Summary

    Modha Rathiri: Raja Karuppasamy, the director of the film *Modha Rathiri*—which is being celebrated by fans on OTT platforms as well as in theaters—has amazed many on social media with his actions. He actively likes and comments on memes and posts featuring himself or his movie.