சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்! மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! தொழிலதிபர் கைது

  • சென்னை: தமிழ் சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் அளித்த புகாரின் பெயரில் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட நடிகையின் தனி உரிமை மற்றும் சட்ட நடைமுறையை கருத்தில் கொண்டு அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    போலீஸ் தரப்பில் சொன்ன தகவலின்படி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நடிகைக்கு கடந்த ஆண்டு அந்த தொழிலதிபர் அறிமுகமானதாக கூறப்படுகிறது. சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரை தனக்கு தெரியும் என்று முன்னணி நடிகர்கள் உடன் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் கூறி அவருடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

    ஏமாற்றம்

    சில மாதங்களுக்கு முன்பு அந்த நடிகையை தொடர்பு கொண்ட நபர் உங்களுக்கு எனக்கு தெரிந்தவங்க மூலமாக புதிய படத்தின் வாய்ப்பு வாங்கி தரேன், அதோடு ஒரு அவார்ட் ஃபங்ஷன் நடக்கப்போகிறது அதில் உங்களுக்கு அவார்ட் தருவதற்காகவும் உங்ககிட்ட பேச வேண்டும் என்று கூறி மதுரங்கம் அருகே உள்ள ஒரு விடுதிக்கு நடிகையை அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    வன்கொடுமை

    அங்கு கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருப்பதாக நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது. அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டி நடிகையிடம் இருந்து 2 லட்சம் ரொக்க பணம் மற்றும் சுமார் 11 பவுன் தங்க நகைகளை பெற்றதாகவும் அந்த நடிகை கூறி இருக்கிறார்.

    புகார்

    அதற்குப் பிறகும் அந்த நபர் விடாமல் மிரட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். இதற்கு மேல் பொறுத்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து அந்த நடிகை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். நடிகை கொடுத்த புகாரை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளி கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    காவல்துறை அட்வைஸ்

    விசாரணை அடிப்படையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். சில வருடங்களாகவே சினிமா வாய்ப்புகள், ஆடிஷன், பட வாய்ப்பு என்ற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படுவதாக பல்வேறு புகார்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சோசியல் மீடியா மற்றும் தெரிந்தவர்கள் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர் மிரட்டல், பணம்பறிப்பு போன்ற குற்றம் செயல்கள் நடைபெறுவதாக போலீசார் எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்படுபவர்கள் மிரட்டுபவர்களுக்கு பயந்து கொண்டு இருக்காமல் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்று அதிகாரிகள் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

    English Summary

    TV actress: The incident of the arrest of a private company owner on the basis of a complaint filed by an actress, who is playing a small character in a few serials and a few movies, has created a lot of excitement. The police have not released the name of the victim actress considering her privacy and legal process. According to the information given by the police, the actress, who was living alone after separating from her husband, met the businessman last year. It is said that he got close to him by saying that he knew many film producers and directors and that they would give him the opportunity to act with leading actors.