சென்னை: பல மாதங்களாக அரசியலை விட அதிகமாக பேசப்பட்ட விஷயத்தில் ஒன்று முதலமைச்சர் விஜய் - சங்கீதா தம்பதியின் விவாகரத்து சர்ச்சை. சோசியல் மீடியாவில் தினமும் ஒரு வதந்தி, வாரம் தோறும் புதிய தகவல், நீதிமன்ற விசாரணை வந்தாலே... புதிய விவாதம் இப்படித்தான் கடந்த சில மாதங்களாக ஓடின. ஆனால் அந்த கதைகள் கடந்த சில வாரங்களாக நடந்த இரண்டு சம்பவங்கள் ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
முதலில் பேச ஆரம்பித்தது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான். சஞ்சய் என்ன பேசுவாரோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு அவர் மகிழ்ச்சியை கொடுத்துவிட்டார். என்னுடைய அப்பா என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்ன விஷயம் பெரிதாக பேசப்பட்டது. விஜய் விவாகரத்து வழக்கு பற்றிய தகவல் வெளியானதுமே பிள்ளைகள் ரெண்டு பேரும் அம்மாவுக்கு சப்போட்டாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
அதிலும் விஜய் முதல்வராக வெற்றி பெற்று பதவியேற்ற சமயத்தில் கூட சங்கீதாவும் கலந்து கொள்ளவில்லை அவருடைய பிள்ளைகளும் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஜேசன் ரொம்ப நல்ல பையனாக இருக்கிறாரு. அம்மாவுக்கு நடந்த அநியாயத்துக்கு அவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் என்றெல்லாம் பலரும் கதைக்கட்டி வந்தனர். ஆனால் சிக்மா படத்தின் ப்ரோமோஷனில் சஞ்சய் பேசும்போது மொத்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்துவிட்டார்.
சில கட்டுக்கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதை எலலாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என்பதால் அதை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி இருந்தார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் அவர் மெச்சூராக பேசிய விதமும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று விஜய் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கூட இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் காத்திருந்தனர். கடைசியில் சங்கீதா இதற்கு மேல் நான் இந்த வழக்கை நடத்த விரும்பவில்லை என்று வாபஸ் வாங்கி விட்டார். ஆனால் இது தான் நடக்கும் என்பது சில மாதங்களுக்கு முன்பே தெரியும். காரணம் சங்கீதாவுடன் அவருடைய மாமியாரும் நெருங்கிய தோழியமான ஷோபா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. விஜய்யின் அம்மாவே பலபேட்டியில் சொல்லி இருக்கிறார். நானும் சங்கீதாவும் நெருங்கிய தோழிகள் என்று.. ஏற்கனவே ஷோபா விஜய் மற்றும் சங்கீதாவிற்கு அட்வைஸ் செய்திருந்தாலும் இப்போது அவர் பேசியதால்தான் சங்கீதா மனம் மாறினார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் விவாகரத்து வழக்கு வெளியே தெரிய தொடங்கிய பிறகு பல அவமானங்களும் சந்தித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருவரும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து வேண்டும் என்று ஜீவனாம்சம் மற்றும் சில உரிமைகள் தனக்கு வேண்டும் என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகன. அதற்குப் பிறகு ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் என பலமுறை விசாரணை நடைபெற்றது. அப்போது என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. விஜய் எலக்ஷனில் போட்டியிடுவதால் இவருடைய குடும்பத்தை வைத்தே பல சர்ச்சைகளும் கிளம்பி வந்தது. சமீபத்தில் கூட விஜய்யை பார்த்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை காணவில்லை என்று மனைவி தேடிக் கொண்டிருக்கிறார் என்று சிலர் கிண்டல் செய்திருந்தனர். இதையெல்லாம் சொல்லி தான் சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. சங்கீதா விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பிள்ளைகளின் நலனுக்காக மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சங்கீதா விவாகரத்து வழக்கில் நடிகை ஒருவருடன் விஜய் பழகி வருகிறார், அதனால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை.. நாங்கள் அவருடன் பேசிய போது இனி நான் அந்த நடிகையுடன் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளிநாட்டில் அவருடன் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். அந்த நடிகையையும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுகிறார். அது எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் மன வருத்தத்தை கொடுக்கிறது என்று கூறியிருந்தார். அதை எல்லாம் கடந்து இப்போது சங்கீதா வழக்கை வாபஸ் வாங்கி இருப்பது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.ஜேசன் சஞ்சய் பேட்டி
விவாகரத்து வழக்கு
விஜய் பற்றிய விமர்சனம்
சங்கீதாவின் குற்றச்சாட்டு