சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் உள்ளிருக்கும் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களையும் கடுப்பேத்துற மாதிரியே பண்ணிக் கொண்டிருப்பார். அதுபோலத்தான் இந்த பிக் பாஸ் தமிழ் 10வது சீசனில் முனியம்மா வந்து சேர்ந்திருக்கிறார். இன்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த ஆர்ப்பாட்டம் தான் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியில் தொடங்கி கடந்த சீசன் பார்வதி வரைக்கும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் எல்லா ப்ரோமோவில் நானே வருவேன் என்பது போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மற்ற போட்டியாளர்கள் ஏதாவது சொன்னால் உடனே அதை எதிர்த்தே பேசி சண்டை வளர்ப்பது சில போட்டியாளர்களின் வாடிக்கை. இதையெல்லாம் பார்த்து பழகி இந்த 10வது சீசனில் காமன்மேன் நிகழ்ச்சி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முனியம்மா ஆரம்பத்தில் இருந்தே யார் என்ன சொன்னாலும் விதண்டாவிதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் முனியம்மா
அதே நேரத்தில் சில இடங்களில் எனக்கு புரியல என்று சொல்லிக் கொள்ளும் முனியம்மா அடுத்த நிமிடமே நான் என் சொந்த மூளையில் பேசுகிறேன், என்னுடைய முடிவு தான் சரி என்பது போலவே வாதிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் சில ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் கொடுத்தாலும் பலர் இவங்க சத்தத்தை கேட்க முடியல தயவுசெய்து இந்த வாரமே வெளியே அனுப்பிடுங்க என்று சொல்லி வருகின்றனர்.
இந்த வார தலைவராக இருந்த சாதிகாவை புலம்ப வைத்து கடைசியில் அவர் அந்த பதவியில் இருந்தே விலகி விட்டார். அவர் போனால் என்ன நான் வரேன் என்று புது தலைவராக வந்திருக்கும் வினோத் பாபு முனியம்மாவே லெபட் கேண்டில் டீல் பண்ணுகிறார். இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கான 3 போட்டியாளர்களை நாமினேஷன் செய்திருக்கிறார். அதில் முனியம்மாவும் இருக்கிறார். உடனே முனியம்மாவுக்கு ஆதங்கம் வந்துவிட்டது. Bigg Boss: ஒரு மனுஷனுக்கு இப்படியா சோதனை வரணும்? பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம்! வெளியேறிய பிளாக் பாண்டி இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த வாரம் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட போவதில்லை. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தான் அவர்களுக்குள் 3 பேரை நாமினேஷன் செய்து அவர்களிலிருந்து ஒருவரை வெளியேற்றப் போகிறார்கள். அதனால் யார் வெளியேறுவார்கள் என்று கேள்வியும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த வார நாமினேஷனில் முனியம்மா, தன்யா, சிவன்யா மூன்று பேரும் இருக்கிறார்கள். அதில் தனியாவுக்கு ஏற்கனவே அதிகமான பேன்ஸ் உருவாகி விட்டார்கள். அதனால் அவரை இன்னும் சில வாரங்கள் இருக்க வைக்க தான் பார்ப்பார்கள். முனியம்மாவும் அடிக்கடி சண்டை போட்டு கன்டென்ட் கொடுத்திருக்கிறார். அதனால் அவரையும் வெளியே அனுப்ப மாட்டார்கள். இதில் சிக்க போவது இந்த வாரம் சிவன்யாவாகத்தான் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையே முனியம்மா இப்போ காட்டு கத்து கத்திக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் இவருக்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்தால் தான் நல்லா இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.பிக் பாஸ் புது தலைவர்
நான் ஒரு சாதாரண பெண் இந்த நிகழ்ச்சியில் வந்து இருக்கிறேன் நீங்க என்னை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பிட்டிங்கன்னா உங்க எல்லாரையும் ஜெயிச்சுட்டேன், என்னை பாத்து நீங்க எல்லாரும் பயந்துட்டீங்கன்னு நான் நெஞ்சை நிமித்துட்டு கெத்தாக வெளிய போவேன் என்று ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.பிக் பாஸ் 10 முதல் எவிக்ஷன்
இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்