அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க்கில் நடந்த செயல்? இது நல்லாவா இருக்கு?

  • சென்னை: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் ஹோட்டல் டாஸ்க்கின் அதிசய கெஸ்ட்களுக்கு மட்டும் ரொம்பவே பொருந்தும் போல இருக்கு. குறிப்பாக தன்யா, அஸ்மிதா, சவனியா மூன்று பேரும் விதவிதமாக உணவு ஆர்டர் செய்வதை பார்த்தால், வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பார்க்கிற ரசிகர்களுக்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை சுமார் 20 நாட்களாக இரண்டு தோசை, அரை கப் கஞ்சி என்று கிடைத்ததை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தவர்கள், ஹோட்டல் டாஸ்க் என்று வந்ததும் மீன், முட்டை, இறால், சிக்கன், மட்டன், ஃப்ரூட் சாலட் என்று வரிசையாக ஆர்டர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் தமிழ் 10 பிரச்சனைகள்

    ஆர்டர் செய்வதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் ஆர்டர் செய்ததை முழுமையாக சாப்பிடுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே தூக்கிப் போடுவது, அதன்பிறகு வயிறு சரியில்லை என்று பாத்ரூமுக்கும் கெஸ்ட் ரூமுக்கும் போய்க்கொண்டிருப்பது என்று இந்த டாஸ்க் வேறொரு பக்கத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. வெளியில் இவர்கள் எல்லோரும் நல்ல ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் இந்த 20 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் உணவுக்காக என்ன பாடுபட்டார்கள் என்பதையும் மறந்துவிட முடியாது. ஒரு காபிக்குக் கூட கணக்கு பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது கிடைத்த வாய்ப்பை இப்படியா பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

    Advertisement

    அதிலும் தன்யா விஷயம் இன்னும் சுவாரஸ்யம். புல் டாஸ்க் முடித்துவிட்டு வாந்தி எடுத்து, ரொம்பவே டயர்டாக இருந்த நிலையிலும், "எனக்கு ஹெர்ப் பொட்டாட்டோ வேண்டும், பூசணிக்காய் சூப் வேண்டும்" என்று கேட்கிறார். அப்போது வினோத் பாபு, இப்பதான் வாந்தி எடுத்தீங்க... அதுக்குள்ள ஹெர்ப் பொட்டாட்டோ கண்டிப்பா வேணுமா? அதுவும் பூசணிக்காய் சூப் வேணுமா? என்று கேட்கிறார்.
    அதற்கும் தன்யா, ஆமா, வேணும் என்று சொல்கிறார்.

    புது டாஸ்க்

    இதை பார்த்தால், உடம்பு சரியில்லை என்பதற்கும் ஒரு பக்கம், ஹோட்டல் மெனுவில் பிடித்ததை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதற்கும் இன்னொரு பக்கம் என்று தன்யாவுக்கு தனி கணக்கு போல தெரிகிறது. சவனியா விஷயமும் கொஞ்சம் வேற லெவல். நூடுல்ஸ் தட்டில் வந்தவுடனேயே பார்த்தால், "இவ்வளவு நம்மால் சாப்பிட முடியுமா?" என்று யோசிக்க முடியும் இல்லையா? ஆனால் முதலில் எடுத்து சாப்பிட்டுவிட்டு, பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், "எதுக்கு இவ்வளவு தரீங்க? கம்மியா தர வேண்டியது தானே... என்னால் இவ்வளவு சாப்பிட முடியாது" என்று சொல்கிறார்.

    Advertisement
    விஜய் சேதுபதி செய்ததை மறக்க முடியாது.. அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா உருக்கம்

    வேஸ்ட் ஆகும் சாப்பாடு

    அட, முதலில் பார்த்தபோதே தெரிந்திருக்க வேண்டியதுதானே என்றுதான் ரசிகர்கள் கேட்கிறார்கள். அஸ்மிதாவும் சவனியாவும் வேறொரு பக்கம். சாப்பிட கூப்பிடும்போதே வராமல் சவனியாவுடன் ஏதோ ஈகோ விளையாட்டு. அதன்பிறகு லேட்டாக வந்து, சாப்பாடு சூடாக இல்லை, அதனால் சாப்பிடும் மூட் இல்லை என்று அஸ்மிதா சொல்கிறார்.

    வினோத் பாபு, தன்யாவுக்கு ஹெர்ப் பொட்டாட்டோ வேணுமாம்... செய்யத் தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு ஷாதிகா, எவனுக்கு தெரியும்? என்று சொல்ல, வினோத் பாபு, அப்ப என்ன செய்வீங்க? என்று கேட்கிறார். அதுக்கென்ன... இனி தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்று சொல்கிறார் சதிகா. பாவம், பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களை சோதனை எலிகளாக வைத்து ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பரிசோதனை நடக்குது போலத்தான் இருக்கு. சரி, இது ஒரு டாஸ்க். கெஸ்ட்களாக இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த உணவை தயார் செய்வதற்காக நாள் முழுவதும் கிச்சனில் நின்று சமைப்பது யார்?

    Advertisement

    ஷாதிகாவும் அவினாஷும் தொடர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாத்திரங்களை அன்சார் தொடர்ந்து கழுவிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர்களும் இந்த வீட்டுக்குள்ளேயே ஒரு டாஸ்க்கை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் குறைந்தபட்சம் அவர்கள் படும் கஷ்டத்தையும், உணவை வீணாக்காமல் இருப்பதையும் இந்த கெஸ்ட்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்திருக்கலாம் என்பதுதான் இப்போது ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

    அடுத்தவங்க ட்ரிக்கர் பண்றதால உங்க குணம் மாறுதுனா.. நீங்கள் வீக்கா இருக்கீங்க..! விடாமல் அடிக்கும் விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி ரியாக்ஷன்

    டாஸ்க் என்றால் விளையாடலாம். ஜாலியாக இருக்கலாம். ஒருவரை ஒருவர் கலாய்க்கலாம். ஆனால் உணவை வீணாக்குவது மட்டும் கொஞ்சம் அதிகமாகிவிடக்கூடாது. இந்த வாரம் விஜய் சேதுபதி வந்து இதைப் பற்றி என்ன கேட்கப் போகிறார் என்பதுதான் இப்போது பார்க்க வேண்டிய விஷயம். குறிப்பாக உணவுக்காக இத்தனை நாட்கள் கஷ்டப்பட்ட வீட்டுக்குள் இப்போது கிடைத்த சாப்பாட்டை இப்படியாக வீணாக்குவது குறித்து அவர் கேள்வி கேட்பாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    English Summary

    Bigg Boss: They say that even nectar becomes poison if consumed in excess. Whether or not that applies to everyone else, it certainly seems to fit the 'surprise guests' who have arrived for this week's hotel task in the Bigg Boss house. Watching the trio—Dhanya, Asmitha, and Savaniya—place such a wide variety of food orders leaves not only the housemates but even the viewers at a loss for words.