நான் என்ன பிறந்தமேனியாகவா வந்தேன்? நைட்டி போட்டது தப்பா? பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வெடித்த விவாதம்

  • சென்னை: பொதுமக்களையும் போட்டியாளராக களம் இறக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அடுத்தடுத்து சர்ச்சையை சந்தித்து வருகிறது. 50 பேரை இரண்டு பஸ்ஸில் அழைத்து சென்ற விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது போட்டியாளர் பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து ஆடிஷனுக்கு வந்த விவாகரம் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    பிக் பாஸ் 3 காமன்மேன் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரிய வர்ஷினி தான் ஒரு இல்லத்தரசி என்பதை வெளிப்படுத்தும் வகையில் நைட்டி அணிந்து நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கு அவரிடம் உடையை மாற்றிக் கொண்டு வருமாறு கூறப்பட்டதாக தெரிகிறது. இதற்கு பிரிய வர்ஷினி இதுதான் என் காஸ்ட்யூம் நான நானாக இருக்கிறேன், நைட்டி அணிவது என்ன கொலை குற்றமா என்று கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சை

    அப்போது நடுவராக இருக்கும் ஆரி ஒருவர் குழந்தையாக பிறக்கும் போது எப்படி இருக்கிறாரோ அதேபோலத்தான் பல வருஷம் கழித்தும் இருப்பேன் என்று சொல்ல முடியுமா? நம்முடைய உடலிலும் மாற்றம் ஏற்படுகிறது அதற்கு தகுந்த மாதிரி ஆடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தகுந்த உடை அவசியமென்று சொல்லி இருக்கிறார். உடனே கோபமான பிரிய வர்ஷினி நான் என்ன அம்மணமாகவா வந்திருக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இதுதான் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போட்டியாளரின் குற்றச்சாட்டு

    மேலும் அவர் பேட்டிகளில் பேசும்போது தான் நைட்டி அணிந்து வருவது குறித்து முன்கூட்டியே நிகழ்ச்சி குழுவினரிடம் பேசி அனுமதி கேட்டதாகவும், அப்போது அவர்கள் வரலாம் என்று சொன்ன பிறகுதான் நான் நைட்டியுடன் வந்தேன். அவர்கள் நைட்டி போடக்கூடாது என்று சொல்லி இருந்தால் நான் வேறு உடை உடுத்தி வந்திருப்பேன் காமன்மேன் என்று பெயர் வைத்துக்கொண்டு உண்மையான காமன் மேனை தேர்வு செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    நைட்டி சர்ச்சை

    அதோடு நிகழ்ச்சி தன்னை வைத்து டிஆர்பிக்காக சர்ச்சை உருவாக்கியதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை நிகழ்ச்சியில் தன்னைப் பற்றியும் நைட்டி விவாகாரம் குறித்து பேசப்பட்ட காட்சிகளை முழுமையாக வெளியிட வேண்டும், அதற்கு விஜய் டிவிக்கு தைரியம் இருக்கிறதா? ராஜு, ஆரி ப்ரோ, ஓவியா பேசியதை கட் செய்யாமல் அப்படியே போடுங்கள் முழு வீடியோவை வெளியிடுங்க பார்ப்போமே என்று கேட்டிருக்கிறார்.

    நான் இதற்கு ஆரி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது அவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது கொச்சையாக இருந்தது. ஒரு பெண்ணிடம் அவர் பேசுவது போல இல்லை மோசமாக பேசினார், என்று பல குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார். அதோடு ஓவியா மட்டும் ஜெனியூனாக நடந்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.

    Advertisement

    எனக்கு உடல்நிலை பிரச்சனை இருந்தது. ஆடிசனுக்கு போன நாள் எனக்கு செகண்ட் டே பீரியட்ஸ் அதனால் எனக்கு கம்பர்டபிளாக இருக்கிற மாதிரி நைட்டியுடன் போய் விட்டேன். பிறகு எனக்கு உடல்நிலை பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து கொண்ட ஓவியா சில நாட்கள் கழித்து கூட எனது பிரைவேட்டாக மெசேஜ் செய்து எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்தார். ஆனால் மற்ற இரண்டு நடுவர்களான ராஜூ மற்றும் ஆரி இருவரும் நடுவர்கள் போல செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை தான் என்று சொல்வது போலத்தான் இதுவும் ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Bigg Boss Common show: Bigg Boss The Common Man, which was launched with the intention of making the common man a contestant, has been facing controversies within a few days of its launch. While there was criticism over the manner in which 50 people were taken in two buses, now contestant Priya Varshini, who came to the audition wearing a nightie, has sparked a new debate.