இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை.. காத்திருக்கும் சர்ப்ரைஸ் படங்கள்

  • சென்னை: தியேட்டரில் ஒவ்வொரு வாரமும் படங்கள் வருவது போலவே ஓடிடி தளங்களும் வாராவாரம் ரசிகர்களுக்கு புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு குடும்பம், மருத்துவம், திர்லர் அனிமேஷன், ரியாலிட்டி ஷோ என பல்வேறு ஜேர்னலில் புதிய படங்களும் வெப்சீரிஸும் வரப்போகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்

    Advertisement

    ஹார்ட் பீட் சீசன் 3

    தமிழில் ஹாஸ்பிடல் பின்னணியில் உருவான வெப் சீரிஸ்களில் மிக அதிகமான வரவேற்பு பெற்ற ஹார்ட் பீட் வெப்சீரிஸியின் 3வது சீசன் வரும் ஜூலை 30ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் புதிய மெடிக்கல் வழக்குகள், புதிய கேரக்டர்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. அதனால் இந்த சீசனை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

    Advertisement

    நூறு சாமி

    விஜய் ஆண்டனி சுவாசிகா உள்ளிட்டோர் நடித்த நூறு சாமி திரைப்படம் தியேட்டரில் நல்ல வசூல் பெற்றது. குடும்ப உறவுகள், கிராமத்து பின்னணி, கணவனை இழந்த பெண்ணின் இரண்டாவது திருமணம் என பல விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    சின்ன சின்ன ஆசை

    நடிகை மதுமிதா மற்றும் இந்திரன்ஸ் நடித்துள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படம் தமிழ், மலையாள குடும்ப திரைப்படம். ஃபேமிலி ரசிகர்களை கவர் பண்ணுவது மாதிரி இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜூலை 28 தேதி அன்று வெளியாகுகிறது.

    Advertisement

    ராத்

    ஆக்சன் மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் ரசிகர்களுக்காக உருவான போர்ச்சுகீசிய மொழி வெப்சீரிஸான ராத் (Raath) இந்த வாரம் வரும் ஜூலை 29ஆம் தேதி நெட்பிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. தன்னோட நினைவுகளை இழந்த ஒருவர் எப்படி புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது

    தி லெஜெண்ட் ஆப் கர்ணா

    மகாபாரதத்தில் கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அனிமேஷன் சீரிஸான தி லெஜெண்ட் ஆப் கர்ணா வரும் ஜூலை 31ஆம் தேதி சோனி லைவ்வில் ஒளிபரப்பாக இருக்கிறது. புராண கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் நல்ல அனுபவத்தை கொடுக்கும்

    Advertisement

    அப்ஜக்ஷன் மை லார்ட்

    நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள தெலுங்கு சீரிஸான அப்ஜெக்ஷன் மை லார்ட் வரும் ஜூலை 31ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் காணாமல் போன மக்களுக்காக போராடிய தந்தையின் மரணத்திற்கு பிறகு ஒரு வழக்கறிஞர் அந்த வழக்கை போராடுவது தான் கதை.

    English Summary

    OTT releases this week: Just like films hit theaters every week, OTT sites are offering new films and web series to fans every week. Especially this week Tamil fans will get new films and webseries in various journals like family, medical, thriller animation, reality show. Let's see about it in detail