சென்னை: பிக் பாஸ் பிரபலமான முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வாஹதா சொன்ன குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் முத்துக்குமரன் வாஹதா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தார். ஆனாலும் வாஹதா தொடர்ந்து முத்துக்குமரன் பற்றி அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பிக் பாஸ் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் உறவு வைத்து கொண்டு ஏமாற்றியதால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாஹதா வெளியிட்ட வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்கள் ட்ரீட்மென்ட்க்கு பிறகு ஹாஸ்பிடலிருந்து வீட்டுக்கு வந்த வாஹதா தொடர்ந்து முத்துக்குமரன் பற்றிய வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு வீடியோவில், பிரபலத்துக்காக முத்துக்குமரன் மீது தவறான புகார் சொன்னதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறீங்க, ஆனால் அப்படியெல்லாம் இல்ல. நான் ஏற்கனவே சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு பிரபலமாக தான் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னை நானே அசிங்கப்படுத்தி எனக்கு என்ன லாபம் வரப்போகிறது? எல்லோரும் முத்துக்குமரன் மீது புகார் கொடுங்க என்று சொல்லுறீங்க அதோடு சிலர் ஏன் நீங்க புகார் கொடுக்காமல் இருக்கீங்க அப்போ உங்க மீது தப்பு இருக்கா என்று கேக்குறீங்க. நான் முத்துக்குமரனை தண்டிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவர் என்னை புரிந்து கொண்டு என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தேன். அவர்தான் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னாரு. நான் பிரேக்கப் வலியில் இருந்த போது எனக்கு ஆறுதலாக இருந்தார். அவரை முழுமையாக நான் நம்பினேன். ஆனால் அவருடைய தேவைக்கு மட்டும் என்னை பயன்படுத்தி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நான் தற்கொலைக்கு முயன்றேன். அவரை பழி வாங்க வேண்டும் என்று நான் இதை செய்யவில்லை. இனி இந்த உலகத்தில் வாழவே கூடாது என்று தான் நான் இந்த முடிவெடுத்தேன் என்று சொல்லி இருந்தார். வாஹதா புது வீடியோ இப்போது புதிதாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், எனக்கு மனசு சரியில்லாததால் தான் நான் வால்பாறைக்கு போக முடிவெடுத்திருந்தேன். அப்போது முத்துக்குமரனும் அங்கே வருகிறேன் என்று சொன்னாரு. அவருடைய வீட்டிற்கு என்னை கூப்பிட்டு இருந்தாரு. நானும் ஆபீஸில் வேலையை முடித்துவிட்டு அவருடைய வீட்டிற்கு போனேன். அப்போது டிரஸ் மாத்திக்கோ என்று சொன்னாரு. நான் வேண்டாம் என்று அதே உடையில் தான் இருந்தேன். அந்த சமயத்தில் அவர் வெளியே போயிட்டாரு. அங்கிருந்து உனக்கு என்ன வாங்கிட்டு வர வேண்டும் என்று கேட்டார். நான் நாளைக்கு காலையில் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருக்கீங்களே அப்போ தாலி வாங்கிட்டு வாங்க என்று சொன்னேன். அதற்கு அவர் கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லி வச்சுட்டாரு. பிறகு 10 மணிக்கு பிறகு போன் செய்து இனி எந்த கடையும் இருக்காது அதனால் நாளைக்கு வாங்கிக்கலாம் என்று சொன்னாரு. பிறகு சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தார். அவர் என்னிடம் உரிமையாக தொட்டு முத்தம் கொடுத்து அவருடைய அன்பை வெளிப்படுத்தினார். அப்போது எனக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே நான் ஒரு பிரேக்கப் வலியில் இருக்கிறேன் அதனால் இப்போ நீங்க இப்படி செய்யறது எனக்கு மேலும் பதட்டமாகிறது என்று சொன்னேன். அதற்கு அவர் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேனே எதற்காக பயப்படுற என்று சொன்னாரு. அதற்குப் பிறகும் அவர் என்னுடன் ஒன்றாக இருப்பதில் தான் குறியாக இருந்தார். அந்த சமயத்தில் கூட எனக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது மாதிரி அவர் நடந்து கொண்டதும், கல்யாணத்தை பற்றி கேட்டதும் இப்போதைக்கு அந்த கமிட்மெண்டுக்குள் போக முடியாது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம் என்று சொன்னாரு. கோபப்பட்டு சொன்ன வார்த்தை அதனால் கோபப்பட்டு நான் அங்கிருந்து வந்துவிட்டேன். அதற்கு பிறகு ரொம்ப தூரம் வந்து போன் செய்தேன். அப்போது மீண்டும் அவர் அதைத்தான் சொல்லி கொண்டிருந்தார். அதனால் நான் நீங்க என்னை ஏமாத்துறீங்களா என்று கேட்டேன். உடனே அவர் கோபப்பட்டு போனை வைத்து விட்டார். அதற்கு பிறகு எனக்கு ஒரு குற்ற உணர்வு வந்தது. அவரை நாம தான் சந்தேகப்பட்டுட்டோமோ என்று நானே அவருக்கு போன் செய்து அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அவருடைய கேரக்டர் எனக்கு அதற்கு பிறகு தான் தெரிய தொடங்கியது. அதற்கு பிறகு தான் நான் இனி வாழ முடியாது என்று தற்கொலை முயற்சி செய்தேன். எல்லாரும் என்கிட்ட கேக்குற மாதிரி ஆதாரம் எதுவும் என் கையில் கிடையாது. மேட்டர் பண்ணும் போது எந்த வீடியோவும் எடுத்து வைக்கவில்லை. ஒருவேலை ஒரு மாதம் கழித்து குழந்தை வந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும். ஆனால் அப்படி மட்டும் நடந்து விடக்கூடாது கடவுளே என்னால் அந்த கஷ்டத்தையும் தாங்க முடியாது என்று அந்த வீடியோவில் வாஹதா பேசி இருக்கிறார். சோசியல் மீடியாவில் எல்லா பிரச்சனைகளுக்கும் வீடியோ வெளியிடும் முத்துக்குமரன் தன்னை பற்றி இத்தனை குற்றச்சாட்டுகளை வாஹதா சொல்லிக் கொண்டே இருக்கும் சமயத்திலும், எந்த வீடியோவும் வெளியிடவில்லை என்பதால் அவர் என்ன பதில் சொல்வார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.குற்றசாட்டுகளுக்கு விளக்கம்
முத்துக்குமரன் கமிஷனர் ஆபீசுக்கு போனதும்.. வாஹதா போட்ட அடுத்த பதிவு! லிஸ்ட் பெருசாகிட்டே போகுது!
இரவு நடந்த சம்பவம்
முத்துக்குமரன் கமிஷனர் ஆபீசுக்கு போனதும்.. வாஹதா போட்ட அடுத்த பதிவு! லிஸ்ட் பெருசாகிட்டே போகுது!
பிரேக்கப் வலி
அப்போதான் எனக்கு சந்தேகம் வந்தது.