சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று தொடங்கி இருக்கும் நிலையில் 4வது போட்டியாளராக திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரந்தசாமி வந்திருக்கிறார். அவர் விஜய் சேதுபதி முன்பு நடிகரும், முதல்வருமான விஜய் பற்றி சொன்ன வார்த்தையை கேட்டு விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்சன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 10 போட்டியாளர்கள்
திரைப்பட விமர்சகர் பிரசாந்தை சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி தான். அது போல தான் விஜய் சேதுபதியும் இருந்ததாம். ஏற்கனவே இதுபோல திரைப்பட விமர்சகரும் பிக் பாஸ் விமர்சகருமான ரவீந்தரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு வைத்து நல்ல வைத்து செஞ்சு அனுப்பி விட்டாங்க. அது போதாது இன்று இப்போ பிரசாந்த் ரங்கசாமியையும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.
எங்கள் படத்தை எல்லாம் இவர் ரிவ்யூ பண்ணி கலாய்ப்பீங்களே இந்த நிகழ்ச்சிக்கு வந்து நீங்க என்னத்த கிழிக்கிறீங்கன்னு பாப்போம்னு இது போன்ற விமர்சகர்களை கூப்பிடுகிறார்களா? அல்லது வாங்க உங்களுக்கு எங்களால் முடிந்த பழிவாங்கும் படலத்தை பண்ணுறோம் செஞ்சு இவர்களை எல்லாம் கூப்பிடுகிறார்களா என்றே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பிரசாந்த்தை கூப்பிடும்போது விஜய் சேதுபதியின் ரியாக்ஷனும் அது போல தான் இருந்தது. நிகழ்ச்சிக்கு வந்ததும் இவரை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல படத்தை பற்றி விமர்சனம் பண்ணிட்டு இருப்பாரு இப்போ இந்த நிகழ்ச்சியில் இவரை வைத்து நம்ம விமர்சனம் பண்ணலாம் என்று தான் கூப்பிட்டு இருந்தார். பிறகு வழக்கம் போல பிரசாந்த் இன்ட்ரொடக்ஷன் வீடியோவும் போடப்பட்டது. அதில் அவர் நான் இத்தனை வருஷங்களாக செல்போன் உடனே குடும்பம் நடத்திவிட்டேன். இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்த காரணம் செல்போன் இல்லாமல் மக்களுடன் கனெக்ட்டாக வேண்டும், உள்ளே சமைத்து, துணி துவைத்து காய போட்டு மக்களுடன் அன்பை பகிரப் போகிறேன் என்று சொன்னார். இதை வைத்து விஜய் சேதுபதி அவரை கலாய்த்து விட்டார். பிறகு நீங்க இந்த நிகழ்ச்சிக்கு உண்மையில் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டதும் மனிதர்கள் எல்லோருக்குமே ஒரு கம்பட் சோன் இருக்கும். விஜய் சேதுபதி அவருடைய கம்போர்ட் சோனை தாண்டி வந்ததால் தான் இன்று நடிகராக உலகம் முழுவதும் தெரிந்திருக்கிறார். ஜோசப் விஜய் நடிகர் என்ற கம்போர்ட் சோனை தாண்டி வெளியே வந்ததால்தான் இன்று முதல்வராக மாறி இருக்கிறார் என்று சொன்னதும் பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது விஜய் சேதுபதி இங்கேயும் விஜய் புராணமா என்பது போல பிரசாந்த் ரங்கசாமியை ஒரு லுக்கு விட்டார். ஆனால் இவர் பேசிய பேச்சுக்கு கடைசியில் பிரசாந்தை மேடையிலேயே வெளியே அனுப்பிவிட்டது தான் வேடிக்கையாக போய்விட்டது. சரி இனி வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வரப் போகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.பிரசாந்த் ரங்கசாமி என்ட்ரி
விஜய் பற்றி சொன்ன வார்த்தை
விஜய் சேதுபதி ரியாக்ஷன்