சரத்குமாரை தவிர இதை யாராலும் பண்ண முடியாது! மேடையில் சீமான் சொன்ன விஷயம்.. கலாய்க்கிறாரா? பாராட்டுறாரா?

  • சென்னை : நடிகரும், அரசியல்வாதியுமான ஆர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா நெல்லையில் இந்த வருஷம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுதான் இப்போ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    அதுவும் சரத்குமார் பக்கத்தில் அமர்ந்திருக்க சீமான் அவரை பார்த்து சொன்ன சில வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    சீமான் பேச்சு

    மேடையில் பேசிய சீமான், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்... நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.. ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர்.. அதே மனிதர் திடீரென ஒரு நாள் தனது கட்சியை கலைத்து விட்டு இன்னொரு கட்சியில் சாதாரண தொண்டனாக வேலை செய்ய தயாராக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த தைரியம் தமிழ்நாட்டில் எங்க அண்ணன் சரத்குமாருக்கு மட்டும்தான் இருக்கு என்று பாராட்டினர்.

    அதோடு தன்னை தாழ்த்திக் கொள்ள முடியாதவன் தலைமை ஏற்கிற தகுதியை பெற மாட்டான், கைகட்டி வேலை செய்ய தயாராக இருந்தவன் தான் ஒரு நாள் கட்டளை இடுகிற தகுதியை பெறுவான் என்று பேசினார். அவர் இப்படி பேசியதும் அங்கிருந்து அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். அதற்குப் பிறகு சீமானும் சரத்குமாரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்து பேசி பழைய நண்பர்கள் போல கலகலப்பாக இருந்த காட்சிகளும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    சீமான் இப்படி பேசியதற்கு பின்னால் ஒரு விஷயமும் இருக்கிறது அதாவது தமிழக அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி சரத்குமார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி பல வருஷம் நடத்தினார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தனது கட்சியை கலைத்து பாஜகவுடன் இணையும் முடிவு அறிவித்தார்.

    கட்சியை கலைத்த சரத்குமார்

    அந்த இணைப்பு அப்போது தமிழக அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அப்போது சரத்குமார் இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, மக்களுக்காக எடுத்த முடிவு என்று விளக்கம் கொடுத்திருந்தார். பாஜகாவில் இணைந்த பிறகு அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் இருந்தது.

    Advertisement

    அதனால் தனக்கு கட்சியில் ஒரு தெளிவான பொறுப்பு வேண்டும் என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்ததும், அதற்குறித்து வெளிப்படையாக பேசியதும் செய்திகளில் இடம் பிடித்தது. இந்த ஒரு முழு அரசியல் பயணத்தையே மனதில் வைத்து ஒரு கட்சி தலைவராக இருந்தவர் இன்று ஒரு தொண்டனாக பணியாற்ற தயாராக இருக்கிறார் என்று சீமான் பாராட்டியது தற்போது பேசப்பட்டு வருகிறது.

    ரசிகர்கள் கருத்து

    சீமானின் இந்த பேச்சை சரத்குமார் ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரிதும் வரவேற்று வருகின்றனர். அரசியலில் ஈகோவை விட பணிவு முக்கியம் என்பதை சீமான் நல்லதாக சொல்லி இருக்கிறார், எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல விஷயத்தை மனதார பாராட்டியிருக்கிறார் என்று சொல்கின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் ஒரு காலத்தில் முதலமைச்சர் கனவு கண்டவர் இன்று தொண்டனாக இருப்பதை பாராட்ட வேண்டிய நிலை வந்து விட்டதா? என்றும் தமிழக அரசியலில் இது பெரிய மாற்றத்தின் அடையாளம் என்றும் விவாதித்து வருகின்றனர்.

    English Summary

    Sarath Kumar: Actor and politician R. Sarathkumar's birthday was celebrated on a grand scale in Nellai this year, attended by numerous actors, party functionaries, and political figures. It is the speech delivered at this event by Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, that is currently going viral on social media.