விஜய்யின் பஸ் ரூட்.. பல வருஷத்துக்கு முன்பே சிவகார்த்திகேயன் சொன்னது நடந்துடுச்சே!

  • சென்னை: சில வீடியோக்கள் வெளியாகும்போது பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து அதே வீடியோவைப் பார்த்தால், "அடடா.. அப்பவே இப்படியொரு விஷயத்தை பேசியிருக்காரே!" என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அப்படித்தான் இப்போது சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு மிமிக்ரி வீடியோ இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, மிமிக்ரி கலைஞராகவும் தன்னுடைய திறமையை காட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேடையில் செய்த பல மிமிக்ரி நிகழ்ச்சிகள் இன்றும் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கின்றன. அதில் விஜய்யை போல மிமிக்ரி செய்த ஒரு பழைய வீடியோ இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் மிமிக்கிரி

    அதில் சிவகார்த்திகேயன் விஜய்யைப் போலவே குரல், உடல் மொழி என எல்லாவற்றையும் கொண்டு வந்து பேசுகிறார். சாலமன் பாப்பையாவையும் அந்தக் காட்சிக்குள் கொண்டு வந்து, இருவரும் பேசுவது போல அந்த மிமிக்ரியை அமைத்திருக்கிறார். அதில், விஜய் ஒருவேளை முதலமைச்சராக வந்தால் என்ன செய்வார் என்ற கற்பனை உரையாடல் வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் இருக்கும் திருக்குறளை எல்லாம் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தன்னுடைய பஞ்ச் வசனங்களை வைத்துவிடுவேன் என்று விஜய் சொல்வது போல சிவகார்த்திகேயன் காமெடியாக மிமிக்ரி செய்திருப்பார்.

    விஜய் பற்றி பேச்சு

    அப்போது இது ஒரு சாதாரண காமெடி மிமிக்ரி. விஜய் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த காலகட்டத்தில், அவருடைய பஞ்ச் வசனங்கள், ரசிகர்கள் மத்தியில் இருந்த அந்த இமேஜ் எல்லாவற்றையும் வைத்து சிவகார்த்திகேயன் உருவாக்கிய நகைச்சுவை. ஆனால் இப்போது அந்த வீடியோவைப் பார்க்கும்போதுதான் விஷயம் வேற மாதிரி தெரிகிறது.

    Advertisement

    ஏனென்றால் அந்த வீடியோவில் கற்பனையாக பேசப்பட்ட "விஜய் முதலமைச்சர்" என்ற விஷயம் இன்று நிஜமாகிவிட்டது. 2026-ல் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் நிலையில், பல வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் விஜய்யை முதலமைச்சராக வைத்து செய்த அந்த மிமிக்ரியை ரசிகர்கள் மீண்டும் எடுத்துப் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் இப்போது நடந்திருக்கிற ஒரு விஷயம் அந்த பழைய வீடியோவுடன் இன்னும் நெருக்கமாக பொருந்துகிறது.

    ரசிகர்களை கூட்டி சிவகார்த்திகேயன் செய்த விஷயம்... பின்னணி என்ன? பக்கா பிளான்!

    நிஜமான வார்த்தைகள்

    அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் விஜய் 'வெற்றிப் பயணம்' என்ற விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் நேரடியாக பேருந்துக்குள் சென்று பெண்களுக்கு இலவச பயணச்சீட்டுகளை வழங்கினார். இந்த திட்டம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த மகளிர் இலவச பேருந்து பயணத்தை மேலும் பல வகையான பேருந்துகளுக்கு விரிவுபடுத்துகிறது. இதுதான் இப்போது ரசிகர்களுக்கு அந்த பழைய வீடியோவை மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறது.

    Advertisement
    விஜய் மவுசு குறைந்துவிட்டதா? மகன் படத்துக்கு வந்த நிலை... விஜய் சேதுபதியின் 'பத்தா’ கொடுத்த ஷாக்!

    "அப்போ காமெடிக்காக சொன்னது.. இப்போ விஜய் உண்மையிலேயே முதல்வர்!" என்று ஒரு தரப்பு ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் உண்மையிலேயே எதிர்காலத்தில் விஜய் முதலமைச்சராக வருவார் என்று தனித்திருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அது ஒரு மிமிக்ரி காட்சிக்காக உருவாக்கப்பட்ட கற்பனைதான். ஆனால் காலம் போன விதம் இப்போது அந்த காட்சியைப் பார்ப்பவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆச்சரியத்தை கொடுக்கிறது.

    English Summary

    Sivakarthikeyan: Some videos go largely unnoticed when they are first released. However, watching the same video years later can leave us amazed, making us think, "Wow... he spoke about something like this back then itself!" That is precisely the case with a mimicry video featuring Sivakarthikeyan from several years ago, which is currently circulating online.