சென்னை: 7 மாத எதிர்பார்ப்புக்கு பிறகு நாளை ஜூலை 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் உலகமெங்கும் இந்த வெளியாக இருக்கிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனாலும் இந்த திரைப்படம் தமிழகத்தில் முதல் காட்சி எந்த நேரத்தில் தொடங்கும் என்பது குறித்து இன்னும் தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாது ரசிகர்கள் மத்தியில் பேச பொருளாக மாறி இருக்கிறது.
வழக்கம்போல விஜய் படம் வெளியாகும் நாளில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பே பிளான் போட்டு விட்டார்கள். பலர் இதற்காக ஆபீசுக்கு லீவ் போட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் கூட்டத்திற்கு ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வந்துருங்கன்னு புஸ்ஸி ஆனந்த் சொல்லி இருந்தாரு. இப்ப விஜய்யின் கடைசி படம் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும்? காலேஜ் போற இளைஞர்கள் கூட லீவு போடுவதற்காக பல வருடங்களுக்கு முன்பே இறந்து போன தாத்தா, பாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லாம் ரெடி பண்ணி வைத்திருப்பதாக சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வருகிறார்கள்.
ஜனநாயகன் ஃபர்ஸ்ட் ஷோ
இவ்வளவு எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கும் சமயத்தில் இந்த படத்தின் முதல் காட்சி எப்போதுதான் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. பொதுவாக விஜய் படம் என்றாலே அதிகாலை 4 அல்லது 5 மணி காட்சிக்காக நள்ளிரவிலேயே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிவது வழக்கம். இந்த முறையும் அதே உற்சாகம் இருந்தாலும் ஃபர்ஸ்ட் ஷோ நேரம் குறித்து இன்னும் அனைத்து திரையரங்குகளுக்கும் ஒரே மாதிரியான உறுதியான தகவல்கள் வராததால் சோசியல் மீடியாவில் இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
ஜனநாயகன் படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் தீர்ந்து விட்டன. ஆனால் எந்த தியேட்டரில் 4 மணி ஷோ? 5 மணி ஷோ? அல்லது 9 மணி தானா? என்று அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கும் என்று கேள்விகளுடன் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் பிரச்சனைக்கு விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை? ஹெச் வினோத் சொன்ன காரணம் அதே நேரத்தில் இவ்வளவு பெரிய ரிலீஸ் இன்னும் முதல் ஷோ நேரம் பற்றிய தெளிவான அறிவிப்பு வரவில்லையே என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தியேட்டர்கள் திருவிழா கோலமாக மாறப்போகிறது. அதற்கு முன்பாக முதல் ஷோ நேரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? அல்லது வழக்கம் போல கடைசி நேரத்தில் தான் ரசிகர்களுக்கும் முழு தெளிவு கிடைக்குமா? என்பது இப்போது அதிகமாக பேசப்படும் கேள்வியாக மாறி இருக்கிறது.தமிழ்நாட்டில் முதல் காட்சி நேரம்
இதற்கு முன்பு விஜய் நடித்த படங்கள் வெளியான போது அவர் ஒரு நடிகராக மட்டுமே இருந்தார். அப்போது ஒவ்வொரு ரிலீஸ் ரசிகர்களுக்கு பெரிய திருவிழாவாக இருந்தாலும் படம் தொடர்பாக பல்வேறு அனுமதிகள், முதல் காட்சி நேரம் போன்ற விஷயங்கள் கடைசி நேரம் வரை பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால் இந்த முறை நிலைமையே வேறு. விஜய் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கும் நிலையில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் இந்த ரிலீஸ் மீது கூடுதல் கவனமும் உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் எதிர்பார்ப்பு