என்னங்க இது.. ஐஸ்வர்யா ராஜேஷா இது? கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை! போட்டோஸ் பார்த்து வாயடைத்த நெட்டிசன்கள்

  • சென்னை: பொதுவாக ஐஸ்வர்யா ராஜேஷ் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது ஸ்ட்ராங்கான கேரக்டர், இயல்பான நடிப்பு, புடவை அல்லது சிம்பிளான லுக்கில் குடும்பப் பெண் கேரக்டர் என ஒரு குறிப்பிட்ட இமேஜ். ஆனால் இப்போது அந்த இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டு வருகிறாரே என்று கேட்கும் அளவுக்கு அவருடைய லேட்டஸ்ட் போட்டோ சூட் இணையத்தில் ஒரு கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பார்த்ததும் நெட்டிசன்கள், என்னங்க ஐஸ்வர்யா ராஜேஷா இது? இவங்களும் கிளாமர் ரூட்டுக்கு வந்துட்டாங்களா? ஆளே வேற மாதிரி இருக்காங்களே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் சின்னத்திறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர்தான். காக்கா முட்டை, தர்மதுரை, கனா, வட சென்னை, ரன் சிங்கம் போன்ற படங்களில் கதாபாத்திரத்துக்காகவே தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து இருந்தார்.

    Advertisement

    பிரபலம் கொடுத்த படங்கள்

    குறிப்பாக கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த போதும். காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தபோதும் ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழக்கமான சினிமா பின்பத்தை தாண்டி நடித்தவர். அதனால் தான் இப்போது அவர் பதிவிட்டிருக்கும் இந்த போட்டோக்களை பார்த்தது இது நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா? என்ற கேள்வி வந்திருக்கிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்

    அவர் பகிர்ந்து இருக்கும் போட்டோ சூட்டில் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கிறார். கருப்பு நிற கிராப்டாப், ஜீன்ஸ், அதற்கு மேல் கருப்பு நிற ஜாக்கெட் போன்ற லூக்கில் விதவிதமான போஸில் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். வழக்கமாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியீடும் போட்டோக்களைவிட இந்த போட்டோ சூட் கொஞ்சம் போல்டாகவும் கிளாமராகவும் இருக்கிறது.

    Advertisement

    கிளாமர் போட்டோ ஷூட்

    அதனால் தான் ரசிகர்கள் மேடம் ரூட்டையே மாத்திட்டீங்களா? என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். அவருடைய போட்டோக்களுக்கு life is what you make of it என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்களுக்கு ஏற்ப லட்சக்கணக்கில் லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. ஐஸ்வர்யா இப்போது தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    சமீபத்தில் வெளியான ஓ சுகுமாரி படத்திலும் அவருடைய முக்கியமான கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமீபத்திய பேட்டிகளில் தன்னுடைய எதிர்கால கேரக்டர் குறித்து அவர் பேசும் போது, நெகட்டிவ் ஷேடு கொண்ட கேரக்டரிலும் நடிக்க விருப்பம் இருப்பதாக சொல்லியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் இமேஜ் தாண்டி வித்தியாசமான கேரக்டர்களை முயற்சி செய்யும் ஆர்வம் தான் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறதா என்று கலாய்க்கிறார்கள்.

    Advertisement

    புதிய முயற்சிகள்

    ஒரு பக்கம் தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள், இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் புதிய முயற்சிகள் அதற்கு நடுவே இப்படியாக கிளாமர் போட்டோக்கள் என ஐஸ்வர்யா ராஜேஷின் திரை பயணத்தில் ஒரு புதிய கட்டம் ஆரம்பித்திருக்கிறது போல தெரிகிறது. ஆனால் இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. ஒரு நடிகை கொஞ்சம் மார்டனாக போட்டோ எடுத்தாலே அதை உடனே கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார் என்று சொல்லிவிட வேண்டுமா? என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.

    ஒரு வேலை இது கவர்ச்சி ரூட்டு இல்லாமல் எனக்கும் பிடித்த மாதிரி நான் இருப்பேன் என்று கான்பிடென்ட் ஆகவும் இருக்கலாம் என அவர் போட்டோக்களை ரசித்தப்படியே நெட்டிசன்கள் கமெண்ட்கள் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, இதே போலவே நீங்க கான்ஃபிடன்ட்டா இருங்க மேடம் உங்களுக்கு நாங்க சப்போர்ட் கொடுக்கிறோம் என்று ஹார்டின் பறக்க விடுகிறார்கள்.

    English Summary

    Generally, the name Aishwarya Rajesh brings to mind a specific image: strong characters, natural acting, and the persona of a traditional woman often seen in sarees or simple attire. However, her latest photoshoot is garnering significant attention online, prompting people to wonder if she is gradually breaking that established image.