டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த மாரி செல்வராஜ் பதிவு.. ஆதங்கமான வார்த்தைகள்!

  • சென்னை: டெல்லியில் நீட் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. சமீப நாட்களாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் நாடு முழுவதும் விவாதம் ஆகி இருக்கிறது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம், தடியடி, கண்ணீர் புகை பயன்படுத்தியது எல்லாம் பெரிதாக பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவு

    இந்த சூழலில் மலையாளம் மற்றும் பாலிவுட் நடிகர்கள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழில் சினிமாவை சேர்ந்தவர்கள் பெரிதாக இன்னும் இது குறித்து எந்த பதிவுகளையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவிக்காத சூழ்நிலையில் மாரி செல்வராஜ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது.

    Advertisement

    அந்த பதிவில், அதிகார அடக்குமுறைக்கு எதிராக குரல் எத்திசையில் இருந்து ஒழித்தாலும் அத்திசைக்கு நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பது என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக களமாடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் #BanNEET மற்றும் #SaveStudents என்ற ஹேஸ்டேக்குகளையும் இணைத்து இருக்கிறார்.

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    டெல்லி போராட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் இருந்து இதுவரை அதிகமான முன்னணி நடிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கூட மற்ற மொழி நடிகர்களின் பதிவுகளை சுட்டிக்காட்டி தமிழ் நடிகர்களுக்கு மட்டும் இதுபோல பேசுவதற்கு தைரியம் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    லட்டு மாதிரி சான்ஸ் கொடுத்த ராகுல்.. கப்புனு புடிச்ச பாஜக! நீட் மாணவர் போராட்டத்தில் புதிய திருப்பம்
    இந்த நிலையில் நேற்று இயக்குனரும நடிகருமான பிரதீப் ரங்கநாதன், "லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்" என்று போஸ்ட் போட, அதை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் "தமிழ் சினிமாவில் முதல் மானஸ்தனின் குரல். மற்ற பெரிய நடிகர்கள் சைலன்ட் மோடில்" என்று கிண்டல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mari Selvaraj: As students continue to protest against education related issues including NEET in Delhi, director Mari Selvaraj's post is currently getting a lot of attention on social media. The recent student protest in Delhi has become a topic of discussion across the country. The incident of the police stopping the protestors, using baton and tear gas is causing a lot of publicity.