அட கன்றாவியே... 400 ஆபாச போட்டோக்கள்.. நடிகை செய்த தரமான சம்பவம்! இது பலருக்கும் பாடம்

  • சென்னை: பொதுவாக நடிகைகளுக்கு சோசியல் மீடியா எந்த அளவிற்கு ரசிகர்களை கொடுக்கிறதோ அதே அளவுக்கு மோசமான அனுபவங்களையும் கொடுக்கிறது. ஒரு போட்டோ போஸ்ட் போட்டால் அதற்கு சிலர் பாராட்டினாலும், பலர் தவறான வார்த்தைகளில் கமெண்ட்களை போடுவார்கள். அதையும் தாண்டி சில நடிகைகளின் Dm-க்குள் சென்றும் சிலர் முகம் சுளிக்க வைக்கும் வகையில் மெசேஜ் அனுப்புவதும் உண்டு.

    Advertisement

    இது குறித்து சில நடிகைகள் தைரியமாக வெளியே பேசுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை காயத்ரி ரீமா. அவர் தனக்கு நடந்த அதிர்ச்சி அனுபவத்தை பற்றி சமீபத்தில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    ஜீ தமிழ் பிரபலம்

    ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் காயத்ரி ரீமா. டான்ஸில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாகவே குறும்படங்களிலும் நடிக்க தொடங்கியிருந்தார். அதன் மூலம் சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

    பிறகு ஒரு நாள், மங்களாபுரம், ஹர ஹர மகாதேவ், பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடித்த ஒரே படத்திலேயே ஹீரோயினியாக மாறிவிட வேண்டும் என்று காத்திருக்காமல் தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் காயத்ரி, "யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது.

    Advertisement

    சீரியல் நடிகை பேட்டி

    இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் நீங்க இன்ஸ்டாகிராமில் இதுவரை எத்தனை பேரை பிளாக் செய்து இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக 2 பேர், 10 பேர் என்று பதில் வரும் என்று நினைத்தால் அவர் சொன்ன எண்ணிக்கை அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. 300 முதல் 400 பேரை பிளாக் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் இன்னும் மோசம்.

    சோசியல் மீடியா பிரச்சனை

    சில ஆண்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆபாச புகைப்படங்களை எந்த கூச்சமும் இல்லாமல் காயத்ரியின் Dm-க்கு அனுப்பி இருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இதுபோன்ற நபர்கள் மீது காயத்ரி புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து இதே மாதிரியான தொல்லைகள் வந்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் அவரே சோர்ந்து போய்விட்டாராம். எவ்வளவோ புகார் கொடுத்து பார்த்து விட்டேன் ஆனால் இவர்கள் திருந்தவே மாட்டார்கள் ஒரு கட்டத்திற்கு மேல் நான் புகார் கொடுத்து அலுத்து போய்விட்டேன். அதனால் எல்லோரையும் பிளாக் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ஒரு நடிகையின் போட்டோவை பார்ப்பதும் அவரை பிடிக்கிறது என்று மெசேஜ் அனுப்புவதும் வேறு. ஆனால் அவருடைய அனுமதியே இல்லாமல் ஆபாச படங்கள் தனிப்பட்ட மெசேஜில் அனுப்புவதும் வேறு. இந்த இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசமே இருக்கிறது என்று காயத்ரி ரீமா சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இது போல சில நடிகைகள் சமீப காலமாகவே தாங்கள் படும் கஷ்டங்கள் குறித்து சொல்லி வருகின்றனர்.

    இனி தமிழ்நாட்டுக்கு சங்கு தான்! ஐந்து வருஷம் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.. சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கம்
    சோசியல் மீடியாவில் ஃபேக் ஐடி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முகம் தெரியாது என்பதற்காக ஒரு நடிகையோ அல்லது நடிகரையோ பற்றி ஆபாசமாகவும் தவறாகவும் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு சைபர் கிரைமில் என்னதான் ஆக்ஷன் எடுத்தாலும் இவர்களுடைய தொல்லை மட்டும் இன்னும் குறையவில்லை. இதனால் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

    Advertisement

    நடிகைகளுக்கு மட்டுமல்ல சாதாரணமான பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கூட இதுபோல மோசமான தாக்குதல்கள் வருகிறது என்றும் பலர் கமெண்ட் கொடுத்து இருக்கின்றனர்.

    English Summary

    Gayathri Rema: In general, social media gives actresses as much bad experiences as it gives them fans. While some will appreciate a photo post, many will leave comments with abusive words. Apart from that, there are some actresses who send messages in a way that makes them frown. Some actresses are brave enough to speak out about this. Actress Gayatri Reema is one of those ranks. He has recently spoken openly about his traumatic experience.