Jana Nayagan OTT: சைலண்டாக ஓடிடியில் வந்த ஜனநாயகன்.. அதுவும் எந்த தளத்தில் தெரியுமா?

  • சென்னை: தங்கமே ஜனநாயகன் ஆகஸ்ட் 21 ல் உங்களை சந்திக்கிறார் என்று அறிவித்திருந்த ஜீ5 சொன்னபடியே இன்று படத்தை ஓடிடியில் களம் இறங்கி இருக்கிறது. தியேட்டரில் இன்னும் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒடிடியில் படம் வந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.

    Advertisement

    விஜய் நடிப்பில் ஹெச்டி வினோத் இயக்கிய ஜனநாயகன் படத்துக்கு ஆரம்பம் முதலே ஒரு தனி எதிர்பார்ப்பு. காரணம் விஜய் சினிமாவில் நடிக்கும் கடைசி படம் என்று அடையாளத்தோடு உருவான திரைப்படம். அதற்கு மேலாக படத்தின் அரசியல் பின்னணி, பிரம்மாண்ட நடிகர்கள் பட்டியல். அனிருத் இசை என படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் படத்தின் பயணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

    Advertisement

    ஜனநாயகன் ஓடிடியில் ரிலீஸ்

    பல மாதங்கள் சென்சார் சிக்கல்களால் கிடப்பிலேயே கிடந்தது. கடைசியாக ஒரு வழியாக ஜூலை 23ஆம் தேதி ஜனநாயகன் தியேட்டருக்கு வந்தது. அப்போது திருவிழா போலவே ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். விஜய் படத்திற்கு கடைசியாக தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டம் என்று எமோஷனல் கலந்த ஒரு ட்ராமாவாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஜி5ல் ஜனநாயகம் ஸ்ட்ரீமிங் தொடங்கியுள்ளது.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகியுள்ளது. இதுதான் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பொதுவாக ஒரு பெரிய நடிகரின் படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடிக்கு வருவது ரசிகர்களுக்கு .

    Advertisement

    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

    கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான். அதிலும் ஜனநாயகன் போன்ற அதிக எதிர்பார்ப்புடன் வெளியான படத்திற்கு இவ்வளவு சீக்கிரமே டிஜிட்டல் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வீட்டில் ஷோபாவில் உட்கார்ந்து படியே விஜயை பார்க்கும் வசதியும் கிடைத்து விட்டது. தியேட்டருக்கு போக முடியாதவர்கள் இப்போது வீட்டில் உட்கார்ந்து பார்க்கலாம்.

    English Summary

    Jana Nayagan: Today, the Jana Nayagan film is released in OTT as Zee5 announced that Thangame Dharaman will meet you on August 21. It has come as an unexpected pleasant surprise for Vijay fans that the film has come out in ODD while it is still being screened in theatres.