சென்னை: தமிழகத்தில் சுதந்திர தின விழா நேற்று முன் தினம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற நிலையில் அதில் நடிகை திரிஷா அவருடைய அம்மா உமா கிருஷ்ணனுடன் கலந்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல்வர் விஜய் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிய இந்த நிகழ்வில் திரிஷா தன்னுடைய அம்மாவுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த காட்சிகள் பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தன. திரிஷா மஞ்சள் நிற பட்டுப்புடயில் மிகவும் எளிமையாக அதே நேரத்தில் அழகான தோற்றத்தில் வந்திருந்தார். அவருடைய அம்மா உமா உபகிருஷ்ணனுக்கு பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனுக்கு சமீபத்தில் தான் 70வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் புகைப்படங்களை திரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோக்கள் வெளியான போது உமா கிருஷ்ணனுக்கு 70 வயது என்று சொன்னால் யாரும் நம்பவே முடியவில்லை. மகளை விட அம்மா இளமையாய் இருக்கிறாரே என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு இருந்தனர்.
திரிஷா அம்மா 70 வயதிலும் இளமையாக இருக்கிறாரே எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வந்தாலும், அவருடைய உடல் நலத்தில் அவர் ரொம்பவும் அக்கறை செலுத்தி வருகிறாராம். அதனால் தினமும் சாப்பாடு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா செய்து கொண்டிருக்கிறாராம். இதுதான் தன்னுடைய இளமைக்கு காரணம் என்று அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசியிருந்தார். 70 வயதில் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே ஆச்சரியமாக இருக்கிறது என்று சிலர் சொல்கின்றனர், அதுபோல திரிஷா அழகுக்கு அவருடைய அம்மா தான் காரணம் போல.. நாங்கள் பார்க்கும் பெண்கள் சிலர் 20 வயதிலேயே கால் வலிக்குது, கைவலிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா இவங்க 70 வயதிலும் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரகளே என்று ஒரு ரசிகர் கமெண்ட் போட்டு இருக்கிறார். இன்னொரு ரசிகர் இவங்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று உங்களுக்கு த்ரிஷாவையும் அவருடைய அம்மாவை மட்டும் தான் தெரியும். அவங்க பாட்டிக்கு இப்ப 94 வயது. அவங்களும் இளமையாக தான் இருக்கிறார் அந்த கதை உங்களுக்கு தெரியுமா? என்று கிண்டல் செய்து இருக்கிறார். திரிஷாவுக்கு இப்போது 43 வயது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய அழகுக்கும் காரணம் அவருடைய குடும்ப ஜீன்தான் என்று சில ரசிகர்கள் யாருடைய குடும்பத்தையே பாராட்டி வருகிறார்கள். நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனை இருக்கும்போது உங்களுக்கு இதையெல்லாம் தேவையா பாஸ்? என்று கேட்கிற மாதிரி நம்முடைய மனநிலை போனாலும் நெட்டிசன்கள் சும்மா இருக்கவே இல்லை. திரிஷாவுக்கு தங்கச்சி மாதிரி இருக்காங்க அவங்க அம்மா என்று புகழ் பாடி வருகிறார்கள். பேசாம பிக்பாஸ் வீட்டிற்குள் திரிஷா அம்மா வந்தால் ஓவியாவுக்கு ஆர்மி அமைத்தது போல ஆர்மி அமைத்துவிடலாம் என்றும் சிலர் திரிஷா அம்மாவுக்கு அழைப்பு விடுகிறார்கள்.நடிகை திரிஷாவின் அம்மா
திரிஷா அம்மா போட்டோஸ்
ரசிகர்கள் கருத்து