இசையமைப்பாளர் தேவாவின் இறுதி சடங்கு இன்று எங்கே, எப்போது நடக்கிறது? ரசிகர்களுக்கான முக்கிய தகவல்

  • சென்னை: தேனிசை தென்றல் தேவா மறைந்த செய்தி நேற்று வெளியானதில் இருந்து திறை உலகமே சோகத்தில் இருக்கிறது. முதல்வர் விஜய் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுத காட்சிகளும் காண்போரை கலங்க வைத்திருந்தது. இந்த நிலையில் தேவாவின் இறுதி சடங்கு எங்கே, எப்போது? நடைபெறுகிறது என்ற தகவல்களை அவருடைய குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.

    Advertisement

    தேவாவின் இறுதி சடங்கு

    தேவாவின் இறுதி சடங்கு இன்று அக்டோபர் 18ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அருகே இருக்கும் தேவாவின் சொந்த ஊரான சங்கரமல்லூர் கிராமத்தில் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் ஒரு மணி வரை ரசிகர்களும், திரையுலகினரும் நேரில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்க இருக்கிறது.

    Advertisement

    ஒரு காலத்தில் நம்முடைய காதலுக்கும், கொண்டாட்டத்திற்கும், நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுவதற்கும் தேவாவின் பாடல்கள் இல்லாமல் இருந்திருக்காது. ரஜினி படங்களில் அவர் கொடுத்த இசை, கானா பாடல்களில் அவர் காட்டிய தனித்துவம், சாதாரண மக்களின் வாழ்க்கையை தொட்ட பாடல்கள் என அவருடைய இசை பயணம் ரொம்பவே பெரியது. 400க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஒரு கலைஞரை நாம் இழந்திருக்கிறோம். இப்போது அவரது குடும்பத்தினரை போலவே அவருடைய பாடல்களை கேட்டு ரசித்தவர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

    தேவாவின் எவர்கிரீன் ஹிட்ஸ் பாடல்கள்.. மறக்க முடியுமா அந்த நினைவுகளை? காலத்துக்கும் அழியாத காவியம்
    Advertisement

    தேவாவின் பேட்டிகள்

    தேவா எந்த பேட்டியில் பேசினாலும் பாசிட்டிவாகவே பேசிக் கொண்டு இருப்பார். முகத்தில் எப்போதும் சாந்தமும், தன்னம்பிக்கையும் மட்டுமே இருக்கும். தான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை கடைசி வரைக்கும் மறக்காமல் ஒவ்வொரு மேடைகளிலும் சொல்லி கொண்டே இருப்பார். தன்னுடைய வாழ்க்கை மாறியதற்கு ரசிகர்களும் மக்களும் கொடுத்த ஆதரவு தான் என்று அவர் கடைசியாக கூட ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

    அதுபோல ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் என்ன எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். பொதுவாக சிலர் பேசுவதை பார்த்திருக்கிறேன் அடுத்தவர்கள் முன்பு கால் மேல் கால் போட்டு நெஞ்சை நிமிர்த்தி கொண்டு.. என்னால் தான் எல்லாம் நடந்தது.. எனக்கு தான் எல்லாம் தெரியும்.. என்பது போல உட்கார்ந்து இருப்பார்கள். பழசை மறந்து விடுவார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதை செய்ய மாட்டேன். மேடைகளில் உட்கார்ந்திருக்கும் போதும் கால் மேல் கால் போட்டு அடுத்தவர்களை மதிக்காதது போல உக்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது எனக்கு வராது என்று நெகிழ்ச்சியாக சொல்லியிருந்தார்.

    Advertisement
    Thenisai Thendral: இறந்த தேவாவின் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலி! யார் பரிசாக கொடுத்தது தெரியுமா?

    தன்னம்பிக்கை மனிதன்

    மக்கள் இசை பாடல்களை திரையில் கொண்டு வந்து சாதனை படைப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக போராடி, தானும் முன்னேறி வந்து.. தன்னைப்போல போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் தேவா வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதனாலேயே அவருடைய இழப்பை கானா பாடகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    English Summary

    Deva: The entire film industry has been plunged into grief since the news of the passing of 'Thenisai Thendral' Deva broke yesterday. Prominent figures, including Vijay, Rajinikanth, and Kamal Haasan, have personally visited to pay their final respects. The sight of his son, Srikanth Deva, weeping inconsolably left many deeply moved. In the wake of this, his family has now shared details regarding when and where the funeral rites for Deva will take place.