இறந்த பிறகும் ஆபாசமாக திட்டும் நபர்.. நீயா நானா ஜமீமாவுக்கு எதிரான வெறுப்பு! எங்கே போய் முடிகிறது?

  • சென்னை: ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவருடைய கருத்துக்களை பிடிக்காமல் போகலாம், அவருடன் வாதம் செய்யலாம், அவர் பேசியது தவறு இருக்கிறது என்றால் விமர்சிக்கலாம். ஆனால் ஒருவர் இறந்த பிறகும் அவருடைய புகைப்படத்துக்கு கீழ் மோசமான வார்த்தைகளில் திட்டி எழுவது என்ன மாதிரியான மனநிலை? என்ற கேள்விதான் இப்போது டாக்டர் ஜமீமா விஷயத்தில் எழுகிறது.

    Advertisement

    சில மாதங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வெளிப்படையான பேச்சால் கவனம் பெற்ற டாக்டர் ஜமீமா பேகம் உயிரிழந்த செய்தி நேற்று முன்தினம் வெளியானது. ராமநாதபுரத்தை சார்ந்த அவர் சின்ன வயதிலிருந்து பல கஷ்டங்களை தாண்டி, குடும்பத்தின் பொறுப்புகளையும் தாங்கி கஷ்டப்பட்டு படித்து டாக்டராக மாறி இருந்தார்.

    Advertisement

    நீயா நானா பிரபலம் இறப்பு

    அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் தொடர்ந்து பெண்களுக்காக குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கி இருக்கிறார். அவரை மீட்டு ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி வெளியானதும் பலரும் ஜமீமாவின் குடும்பத்தினருக்கும், நண்பருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மோசமான கமெண்ட்

    ஆனால் அதே நேரத்தில் அவருடைய சமூக வலைத்தள பதிவுகளில் சிலர் மிகவும் மோசமான முறையில் கருத்துக்களை பதிவு செய்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஒரு நபர் ஜமீமாவின் புகைப்படத்தின் கீழ், "உன் ஆட்டம் முடிஞ்சதுடி.." என்று ஒரு மோசமான வார்த்தையையும் சேர்த்து மிகவும் தரக்குறைவான கருத்து பதிவிட்டு இருக்கிறார். இதை பார்க்கும் போது ஒரு கேள்வி வருகிறது. ஒரு மனிதர் உயிரோடு இருக்கும்போது அவரை பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, அவர் பேசிய கருத்துக்களை விமர்சிக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு இவ்வளவு மோசமாக திட்ட வேண்டுமா? இந்த அளவுக்கு அந்த வெறுப்பு எங்கிருந்து வருகிறது? என்று யோசிக்க வைக்கிறது.

    Advertisement

    நீயா நானாவில் ஜமீமா பேசியது

    இந்த அளவிற்கு ஜமீமா மீது கோபம் வருவதற்கு காரணம் நீயா நானா நிகழ்ச்சியில் அவர் குழந்தைகள் வளர்ப்பு குறித்து பேசிய விதம்தான். அந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய தம்பியுடன் கலந்து கொண்டார். அப்போது பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்து வளர்ப்பது தப்பு, ஆண் குழந்தைகளிடமும் பெண்களை எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும், நான் என்னுடைய தம்பிக்கு முதல் முதலாக எடுத்த பாடம் செக்ஸ் எஜுகேஷன் தான் என்று சொல்லி இருந்தார்.

    பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாலியல் தொடர்பான புரிதல்கள் உள்ளிட்ட பல விஷயங்களை நாமே சொல்லிக் கொடுத்தால் அந்த குழந்தைகள் அதை தப்பு தப்பாக கற்றுக்கொண்டு தவறு செய்யாது. இந்த தலைமுறையை இளைஞர்கள் ரொம்பவும் அறிவானந்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களை கட்டுப்படுத்தாமல் அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை அவர்களுடைய போக்கிலேயே விட்டாலே போதும் என்று அவர் போல்டாக பேசி இருந்தார்.

    Advertisement

    எங்கே போனது மனித மனம்

    அப்போதும் அவருடைய பேச்சை சிலர் கடுமையாக விமர்சித்தனர். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளுக்கு இப்படித்தான் புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகமானோர் ஜமீமாவுக்கு ஆதரவாகவும் பேசினார். இந்த நிலையில் அவர் உயிரிழந்த பிறகு கூட அவருடைய புகைப்படத்துக்கு கீழே அவரை தரைக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதால் என்ன கிடைக்கப் போகிறது?

    அவரிடம் நேரடியாக விவாதிக்க முடியாத நிலையில், அவர் இல்லாத நேரத்தில் இவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் என்ன வீரத்தனம் தெறிக்கிறது? ஒருவருடைய வாழ்க்கை முடிந்த பிறகு அவருடைய கருத்துக்களை தாண்டி ஒரு உயிர் போய்விட்டதே என்ற மனித நேயத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி தான் நமக்கு தோன்றுகிறது.

    English Summary

    Neeya Naana One might dislike a person's views while they are alive, argue with them, or criticize them if they were in the wrong. However, what kind of mindset drives someone to post abusive comments beneath a person's photograph even after their death? This is the question arising now in the case of Dr. Jameema.