சென்னை: பாடகி ஜானகியின் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நேரத்தில் 2013ஆம் ஆண்டு அவர் எடுத்த ஒரு துணிச்சலான முடிவு மீண்டும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தற்போதைய காலத்தில் எல்லாம் ஒரு விருது கிடைத்தால் போதும் அதை கையில் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்து அதை ஸ்டேட்டஸ் போடும் உலகம். அதிலும் மத்திய அரசின் பத்மபூஷன் விருது என்றால் சாதாரணமா? ஆனால் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதையே வேண்டாம் என்று எஸ் ஜானகி சொன்ன சம்பவம் இந்திய இசை உலகையே ஒரு காலத்தில் திரும்பி பார்க்க வைத்தது.
பத்மபூஷன் விருது
உண்மையில் ஜானகி விருதை வேண்டாம் என்று சொன்னது கோபத்திலா? அல்லது தனக்கு இதை பெரிய விருது கிடைக்கணும் என்று ஆசையிலா? என்று அந்த நேரத்தில் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதாவது 2013 ஆம் ஆண்டு எஸ் ஜானகிக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருது அது.
ஆனால் அந்த அறிவிப்பு வந்ததும் எல்லாரையும் போல ஜானகி சந்தோஷமாக அதற்கு நன்றி சொல்லவில்லை. மாறாக எனக்கு அந்த விருது வேண்டாம், நான் அதை ஏற்க போவதில்லை என்று சொல்லிவிட்டார். அப்போது எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. எதற்காக இவர் இப்படி சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர் அதற்கு சொன்ன காரணம், 55 வருஷங்களாக பாடிக்கொண்டிருக்கும் தனக்கு இவ்வளவு தாமதமாக அங்கீகாரம் கொடுக்கப்படுவதாக அவர் வேதனையுடன் பேசி இருந்தார். அதோடு பலமொழிகளில் இருக்கும் ரசிகர்கள் தனக்கு கொடுத்த அன்பையும் மிகப்பெரிய விருதாக நான் நினைத்துக் கொள்கிறேன். எனக்கு அதுவே போதும் என்று சொல்லிவிட்டார். அவர் ஒரு சில பாடல்கள் மட்டுமே பாடிவிட்டு மறைந்து போன பாடகி கிடையாது. பல தலைமுறைகளின் காதல், சோகம், சந்தோஷம் என எல்லா உணர்வுகளுக்கு குரல் கொடுத்தவர். ஜானகி விருது வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டதும் பெரிய அளவில் பேசப்பட்டது. சிலர் பத்மபூஷன் மாதிரியான விருதை எப்படி வேண்டாம்னு சொல்லலாம்? என்று கேட்டார்கள். இன்னும் ஒரு சிலர் ஜானகிக்கு இந்த விருது முன்னாடியே கொடுத்திருக்க வேண்டும் என்று அவருக்கு சப்போர்ட் செய்தனர். அதே நேரத்தில் ஜானகி தனக்கு மட்டுமல்ல தன்னைப்போல் இனி யாருக்கும் காலம் கடந்து அங்கீகாரம் கொடுத்து விருது கொடுக்க வேண்டாம் என்று அப்போதே வேண்டுகோள் வைத்திருந்தார்.Janaki : மகன் இறப்பால் தவிக்கும் பாடகி ஜானகி.. அவர் பேத்தி வெளியிட்ட உருக்கமான அறிக்கை!
எஸ் ஜானகியின் விளக்கம்