“திரிஷா போல ரஜினியும்… முதல்வர் விஜய் பிறந்தநாளில் நடந்த சம்பவம்! மீண்டும் கிளம்பிய பனிப்போர் பேச்சு”


  • சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகராக இருந்த காலத்திலேயே விஜயின் பிறந்தநாள் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இந்த முறை அவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் நிலையில் வந்திருக்கும் பிறந்தநாள் என்பதால், வாழ்த்து மழை இன்னும் பெரிய அளவில் பெய்தது.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ரசிகர்கள் கவனித்த ஒரு விஷயம் மட்டும் வேற லெவலில் பேசுபொருளாக மாறியது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அமைதிதான். வழக்கமாகவே விஜயின் பிறந்தநாளில் ரஜினி வாழ்த்து தெரிவிப்பது அரிது என்றாலும், இந்த முறை சூழ்நிலை வேறு. நடிகர் விஜயின் பிறந்தநாள் அல்ல, முதல்வர் விஜயின் முதல் பிறந்தநாள். அதனால் இந்த முறை ரஜினி ஏதாவது பதிவு போடுவாரா என்று பலரும் காத்திருந்ததாகவே சொல்லப்படுகிறது.

    Advertisement

    விஜய் பிறந்தநாள்

    ஏற்கனவே ரஜினி-விஜய் இடையே ஒரு மெல்லிய போட்டி, மறைமுக பனிப்போர், வசூல் ஒப்பீடு, ரசிகர் மோதல் போன்ற பேச்சுகள் பல வருடங்களாக இருந்து வந்தவையே. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவர் வெற்றி பெற்றதும் ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்தாலும், அதற்குப் பிறகும் "விஜய் உயர்வை ரஜினி எப்படி பார்க்கிறார்? விஜய் மீது பொறாமையா?" என்ற கேள்வி அடிக்கடி இணையத்தில் எழுந்துகொண்டே இருந்தது.

    சிலர், "விஜய் முதலமைச்சராகி விட்ட நிலையில் மீண்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்தது ஏன்?" என்று கேட்க, இன்னும் சிலர் "அவரைப் பற்றி ஏதாவது சொன்னாலே அதையும் வைத்து சர்ச்சை கிளப்பிவிடுவார்கள்; அதனால்தான் ரஜினி அமைதியாக இருக்க முடிவு செய்திருப்பார்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement
    60 வருஷமா பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க.. விஜய் ஏன் அமைதியா இருக்கிறார்?விமர்சனத்துக்கு SAC அதிரடி

    இந்த முறை சமூக வலைதளங்களில் இன்னொரு சுவாரஸ்யமான ஒப்பீடும் ஓடியது. அதாவது, "விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா என்ன போஸ்ட் போடுவார்?" என்று ஒரு பக்கம் ரசிகர்கள் காத்திருந்தனர். அதே நேரத்தில், "ரஜினி வாழ்த்து சொல்வாரா?" என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் கடைசியில் இருவரிடமிருந்தும் எந்த பதிவு வராததால், "காத்திருந்த ரசிகர்களை இருவரும் ஏமாற்றிட்டாங்களே!" என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கூட முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பல தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு வீடியோக்கள் வெளியிட்டிருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. இப்படியிருக்க, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்த் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

    Advertisement
    Journey of Vijay: விஜய்யின் திரை பயணம் எப்படி அவரின் அரசியல் ப்ளூபிரிண்ட்டாக மாறியது? இதை கவனிங்க!

    ஏமாற்றம் கொடுத்த பிரபலங்கள்

    மொத்தத்தில், முதல்வர் விஜயின் பிறந்தநாளில் வந்த ஆயிரக்கணக்கான வாழ்த்துகளுக்கு நடுவே, ஒரு வாழ்த்து மட்டும் வராதது பெரிய விவாதமாகி இருக்கிறது. அது ரஜினியின் வாழ்த்து. அவர் அமைதியாக இருந்தது சாதாரண விஷயமா, சர்ச்சையை தவிர்க்க எடுத்த முடிவா, இல்லையென்றால் இன்னும் முடிவுக்கு வராத பனிப்போரின் சிக்னலா என்ற கேள்விதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏற்கனவே திரிஷா ஒவ்வொரு முறையும் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் சமீப காலமாக திரிஷா பற்றி சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் அவர் இந்த முறை என்ன போஸ்ட் போடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அவரும் கடைசிவரைக்கும் போஸ்ட் போடவில்லை. இதனால் திரிஷா மற்றும் ரஜினி இருவருடைய போஸ்ட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

    English Summary

    Rajinikanth: Tamil Nadu Chief Minister Joseph Vijay’s birthday celebrations turned into a huge talking point this year, with wishes pouring in from political leaders, film personalities and fans across social media. Since this is Vijay’s first birthday after becoming Chief Minister, the attention around it was naturally much bigger than usual. Former Chief Minister M.K. Stalin, Prime Minister Narendra Modi, Kamal Haasan and several others publicly wished Vijay, making the occasion trend widely online.