மயில்சாமிக்கு ஏன் அரசு மரியாதை தரல.. இதென்ன கோயில் சுண்டலா? பாக்யராஜ் சடங்கில் அதை கவனிச்சீங்களா


  • சென்னை: பாக்யராஜுக்கு அரசு மரியாதை தந்திருக்க கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் இந்த அரசு மரியாதை சிகர இயக்குனர் பாலச்சந்தருக்கு ஏன் தரவில்லை? மயில்சாமிக்கு ஏன் தரவில்லை? அரசு மரியாதை என்பதற்கான அளவுகோல் என்ன? தமிழ்நாட்டில் அரசு மரியாதை என்பது மிகவும் மலிவாகப் போய்விட்டது. இந்த பாரபட்சம் காட்ட கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    Advertisement

    பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் பெரிய அளவில் கூட்டமே இல்லை. திரையுலகில் பெரும்பாலான துயர நிகழ்ச்சிகளுக்கு பாக்யராஜ் சென்றதே இல்லை.. அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை.

    Advertisement

    இவரது காலகட்டத்தில் வந்தவர்தானே விஜயகாந்த்? விஜயகாந்த்து இறப்புக்கு மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் வந்தது? விஜயகாந்த்தால்தான் என் மகள் டாக்டருக்கு படித்தார் என்று கஸ்தூரி ராஜா சொல்வது போல, இதுவரை பாக்யராஜால் இந்த உதவியை பெற்றோம் என்று இதுவரை யாருமே சொன்னதில்லை.

    சில நடிகைகள் இன்று இறுதிச்சடங்கில் செய்த ஓவர் ஆடிடியூட்டை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், அந்த குடும்பத்துடன் இந்த நடிகைகள் நெருக்கமாக இருந்திருக்கலாம்.

    செத்த பிறகு புகழ்மாலை ஏன்?

    ஆனால் இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டு முக்கிய அமைப்புகளுமே பாக்யராஜை நீக்கி, ஒட்டுமொத்தமாகத் திரை உலகம் அவரைத் தள்ளிவைத்துவிட்டதாக சொல்கிறார்கள். ரசிகர்கள் பாக்யராஜை கடைசிவரை கைவிடவில்லை, ஆனால், அவரை கைவிட்டது யார்? அப்பறம் ஏன் ஒட்டுமொத்த சினிமா உலகமும் திரண்டு வந்து அவருக்கு புகழாரம் சூட்டறீங்க? அவர் உயிரோடு இருந்தபோது தள்ளிவைத்துவிட்டு, செத்த பிறகு மாலை போட்டு "அவர் அப்படிப்பட்டவர்" என்று மக்கள் மத்தியில் ஒப்பாரி வைப்பது அர்த்தமற்ற போலித்தனம்.

    Advertisement

    பாக்யராஜுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.. நல்ல விஷயம்தான்.. பாக்யராஜ் ஜாம்பவான் என்றால், திரையுலகின் மாபெரும் சிகரமான இயக்குநர் கே. பாலசந்தருக்கு ஏன் அரசு மரியாதை தரப்படவில்லை.. மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நடிகர் மயில்சாமி மறைந்தபோது ஏன் அரசு மரியாதை கொடுக்கப்படவில்லை?

    முதலமைச்சர் சினிமா துறையை சார்ந்தவர் என்பதால், சினிமாவில் யார் இறந்தாலும் அரசு மரியாதை கொடுப்பது என்ன கோயில் சுண்டலா? இது தவறான போக்கில்லையா? இந்த அரசு மரியாதை என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் கிடையாது.. அதற்கு ஒரு வரையறையும், அளவுகோலும் இருக்க வேண்டும்.

    Advertisement

    பாக்யராஜுக்கு அரசு மரியாதை

    பல நீதியரசர்களுக்கு அரசு மரியாதை தரப்படவில்லையே? அவ்வளவு ஏன்? சமூகத்திற்காக 36 ஆபத்தான வேலை செய்து, பணியில் இருக்கும்போதே இறந்துபோகும் ஒரு சாதாரண துப்புரவுப் பணியாளருக்கு ஏன் அரசு மரியாதை தருவதில்லை?

    சினிமாவும் ஒரு தொழில்தானே, அதை கலை என்று சொல்லக்கூடாது.. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிவிட்டால் அங்கேயே கலை என்பதன் அர்த்த்தமே முடிந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் அரசு மரியாதை என்பது மிகவும் மலிவாகப் போய்விட்டது. பாக்யராஜுக்கு அரசு மரியாதை தந்திருக்க கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் இந்த பாரபட்சம் காட்ட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விமர்சனங்கள் - எதிர்கருத்துக்கள்

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை கொண்டிருக்கிறது.. "சரியான கருத்து, சிறந்த விவசாயிகள் , சிறந்த வியாபாரிகளுக்கு அரசு மரியாதை கொடுப்பது தானே? சமூக ஆர்வலர்கள், ராணுவ வீரர்களுக்கும் இந்த மரியாதை தரப்பட வேண்டும் என்றெல்லாம் ஆதரவு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ஆனால் மேலும் சிலர், "பாக்யராஜ் உயிருடன் இருக்கும்போதே இதையெல்லாம் சொல்ல வேண்டியதுதானே? இப்போது வந்து ஏன் பழைய கதைகளை பேச வேண்டும்" என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Why Didn't Mayilsamy Receive State Honours? The Question Raised Again at Bhagyaraj's Funeral