சென்னை: சல்மான் கான் தோற்றம் மாறியிருக்கிறது.. கடந்த 28 ஆண்டுகளாக பிஷ்னாய் பிரிவினர் சல்மான் கானுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.. "'உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று மிரட்டி கடிதங்கள் அனுப்புவதும், போனில் அழைத்து அவரது குடும்பத்தினரை மிரட்டுவது போன்று அவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. எனினும், இதையெல்லாம் சல்மான் கான் பொருட்படுத்தவில்லை" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Media circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சல்மான் கான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. அதைப் பார்க்கும்போது, 'இது உண்மையிலேயே சல்மான் கானா?' என்று அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.. அவரது தோற்றம் முற்றிலும் மாறுபட்டுள்ளன.
பாலிவுட்டில் அமீர் கான், ஷாருக் கான் ஆகியோருக்கு நிகராக சல்மான் கானுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.. அவரது கம்பீரமான உடலமைப்பும், தனித்துவமான டிரஸ்ஸிங் ஸ்டைலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவை. ஆனால், இப்போது ஆளே உடைஞ்சு போயிருக்கார்.. தளர்ந்து காணப்படுகிறார்... 61 வயதாகிறது, ஆனால் 75 வயது முதியவரின் தோற்றம் வந்துவிட்டது போல அவரது முகம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, அவருக்கு முகத்தில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் தொடர்பான குறைபாடு ஏற்பட்டது. அதற்குபிறகு சர்க்கரை நோயின் தாக்கமும் இருந்தது. இதற்கெல்லாம் உரிய சிகிச்சைகளையும், டயட் கண்ட்ரோலையும் மேற்கொண்டு வந்தார்.. ஆனால் அதிலிருந்தெல்லாம் மீண்டு வந்துவிட்டார். ஆனாலும், உடல்நல சிக்கல்களை விடவும், பல வருஷமாகவே அவர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. 1998ம் ஆண்டு அவர் "பிளாக் பக்" என்று சொல்லப்படும் கலைமானை வேட்டையாடிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. இது அரிய வகை மான் இனமாகும்.. பிஷ்னாய் சமூக மக்கள் இந்த மானை கடவுளாகவும் புனிதமான உயிரினமாகவும் கருதி வழிபட்டு வருகிறார்கள்.. பசுவை கோமாதாவாக கருதுவது போல், அவர்கள் இந்த மானை உயரிய இடத்தில் வைத்து போற்றுகிறார்கள்.. அப்படிப்பட்ட மானை, சல்மான் கான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.. இதன்காரணமாக சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அப்போதிருந்தே சல்மான்கான், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் கடந்த 28 ஆண்டுகளாக அந்த பிரிவினர் சல்மான் கானுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். 'உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று மிரட்டி கடிதங்கள் அனுப்புவதும், போனில் அழைத்து அவரது குடும்பத்தினரை மிரட்டுவது போன்று அவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. எனினும், இதையெல்லாம் சல்மான் கான் பொருட்படுத்தவில்லை.. இயல்பான வாழ்க்கை முறையையே தொடர்ந்தார். கடந்த 2024ல், அவரது வீட்டுக்கு வெளியே அவரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் இருந்து அவர் நூலிழையில் தப்பித்து வீட்டிற்குள் சென்று புகுந்துகொண்டார். அந்த சம்பவத்திற்கு பிறகே, சல்மான் கானுக்கு உயிர் பயமும் பதற்றமும் தொற்றிக்கொண்டன. மான் வேட்டை நடந்தபோது சிறுவனாக இருந்த லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர், இப்போது அந்த அமைப்பின் முதன்மை தலைவராக உருவெடுத்துள்ளார்.. "நமது வழிபாட்டுக்குரிய மானைக் கொன்றுவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருக்கும் சல்மான் கானை சும்மா விடக்கூடாது" என்ற வன்முறை எண்ணத்துடனேயே வளர்க்கப்பட்டவர் லாரன்ஸ் பிஷ்னாய் ஆவார்.. சல்மான் கான் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பிறகு, திரையுலகினரின் வேண்டுகோளை ஏற்று அரசு அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பை வழங்கியது. அவரது வீடு, வாகனங்கள், ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காதவாறு அமைக்கப்பட்டன. அவர் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்புப் படையினரும் செல்கிறார்கள்.. கூட்ட நெரிசலில் ஆபத்து அதிகம் என்பதால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் "சிக்கந்தர் ஷூட்டிங்குக்குகூட நைட் நேரங்களிலேயே வந்து சென்றாராம். இந்த பிஷ்னாய் அமைப்பானது இந்தியா மட்டுமின்றி கனடா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பரந்த நெட்வொர்க்கைக் கொண்டு இயங்கி வருகிறது. அதனால்தான் சல்மான் கானால் வெளிநாடுகளுக்குக்கூட சுதந்திரமாக செல்ல முடியவில்லை.. வெளியிலும் நடமாட முடியவில்லை.. இதனால் அவர் தன்னுடைய சொந்த வீட்டிலேயே சிறைவைக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். "எப்போது என்ன நடக்குமோ" என்ற உயிர் பயமும் தனிமையும்தான், சல்மான் கான் மனநலனையும் உடல்நலனையும் பாதித்துள்ளதாக தெரிகிறது.. இதனால் அவர் வழக்கமான உடல் எடையில் இருந்து சுமார் 8 கிலோ வரை குறைந்து, அடையாளமே தெரியாத அளவிற்குத் தோற்றத்தில் மாறுபட்டுள்ளார்.சல்மான்கான் விரைவிலேயே இந்த நிலையிலிருந்து மீண்டு, பெரிய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.. ஆனால், ஒரு புதிய படத்தில், வயதான கேட்டப் ஒன்றில் நடிக்க உள்ளதால், அதற்காகவே இப்படி சல்மான்கான் மாறியிருக்கிறார் என்றும் மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதில் எது உண்மையோ தெரியவில்லை.. ஆனால், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு மான் வேட்டை சம்பவம், இன்றளவும் சல்மான்கான் வாழ்க்கையில் பேரிடராகவே தொடர்ந்து வருகீறது என்பதே மறுக்க முடியாத உண்மை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.சல்மான் கானுக்கு என்ன ஆச்சு
ஆளே அடையாளம் தெரியல
சல்மான் கான் மான் வேட்டை
28 வருடமாக தொடரும் உயிர் பயம்
"எப்போது என்ன நடக்குமோ"