பெண் கொடுத்த புகார்.. பிக் பாஸ் பாலாஜி வீட்டில் போதை பொருள் சோதனை எதற்காக? பின்னணி தகவல்

  • சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய வீட்டில் 15 போலீசார் நேற்று தீபாவளி நாளில் போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வந்து சோதனை செய்தனர் என்று ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். தன் வீட்டில் இதுபோன்று சோதனை செய்ய என்ன காரணம்? என்பதை எனக்கு முதல்வர் விஜய்யோ, போலிஸ் தரப்பினரும் சொல்லவில்லை என்று பதிவு வெளியிட்டிருந்த நிலையில் இப்போது இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட வீடியோ

    நேற்று தீபாவளி நாளில் சென்னை வானகரகத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதை பொருள் சோதனை நடந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் கொடுத்த புகாரில்தான் சோதனை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் காவல்துறையினர் என் வீடு முழுக்க தேடிப் பார்த்தனர் கடைசியில் அவர்கள் கண்களில் சிக்கியது 3 பூனைக்குட்டியும் ஒரு நாய் மட்டும் தான்.

    Advertisement

    நான் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறேனா? இல்லையா? என்று என்னை கூட்டிக்கொண்டு போய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளட்டும். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன், நான் கிளினாக இருக்கிறேன் அதனால் எதற்கும் பயமில்லை, என்பதனால் தான் நான் வீட்டிற்குள் அனுமதித்தேன். போதைப்பொருள் பயன்படுத்துகிறேன் என்று என் சமையலறையில் உள்ள மசாலா டப்பா வரை காவல்துறையினர் சோதனை இட்டனர். ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் திரும்பி போனார்கள் என்று சொல்லி இருந்தார்.

    காவல்துறை விளக்கம்

    இந்த நிலையில் காவல்துறையில் கொடுத்த விளக்கத்தில், பாலாஜி முருகதாஸ் வீட்டில் பார்ட்டி நடக்கிறது அதை கண்டு என்னுடைய மகள் கெட்டுப் போய்விடக்கூடாது என பெண் ஒருவர் புகார் கொடுத்து இருந்தார், அதற்காகத்தான் நாங்கள் சோதனை செய்தோம். அந்த சோதனையில் போதை பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் மது பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

    Advertisement
    தீபாவளி நாளில் பிக் பாஸ் பாலாஜி வீட்டில் ரெய்டு.. என்ன கிடைத்தது? முதல்வர் விஜய்யை விளாசிய நடிகர்

    அதிகரிக்கும் போதைபொருள் பயன்பாடு

    ஏற்கனவே நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதை பொருட்களால் அதிகமான கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடத்தில் திறைத்துறை பிரபலங்களான நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்து இருக்கின்றனர். அதுபோல இன்னும் சில திறை பிரபலங்களும் பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், திரைத்துறையினரின் மீது காவல்துறையினருக்கு இது போன்ற சந்தேகங்கள் அதிகரிக்கிறதா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

    English Summary

    Balaji Murugadoss: Balaji Murugadoss, who gained fame through the show *Bigg Boss*, posted a video on social media stating that 15 police officers from the Narcotics Control Bureau had conducted a search at his home yesterday, on the day of Diwali. He mentioned that neither the authorities nor the police had explained the reason behind this search. Now, information regarding the reason for this action has emerged.