சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், பேச்சாளராகவும் பிரபலமான ராஜ்மோகன் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் பெற்றுள்ளார். தற்போது அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பை வைத்து அவரது பழைய பேச்சுகள் மற்றும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'காமிக்ஸ்டான் செம காமெடிப்பா" என்ற காமெடி நிகழ்ச்சியில் ராஜ் மோகன் பேசிய ஒரு பழைய வீடியோவை வைத்து இப்போது ஒரு பெண் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் ராஜ்மோகன் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை தனது உடலின் வெவ்வேறு பாகங்களுடன் ஒப்பிட்டு காமெடியாக பேசியுள்ளார். தமிழ்நாட்டின் வரைபடத்தை வைத்து அவர் உருவாக்கிய இந்த காமெடி பல ஊர்களை உடலில் வெவ்வேறு பகுதிகளுடன் இணைத்து இரட்டை அர்த்த வரும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக உடலில் அந்தரங்கப் பகுதியை ஒரு வனப்பகுதி போல குறிப்பிட்டு அதனுடன் முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளை தொடர்பு படுத்தி அவர் பேசியதாக தற்போது வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அப்போது அது ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ராஜ்மோகன் அரசியலில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் பழைய வீடியோவுக்கு புதிய கோணத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஒரு பெண் ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஆபாசத்துக்கும் காமெடிக்கும் வித்தியாசம் தெரியலையா ராஜ்மோகன் சார்? நீங்க இதற்கு முன்பு நடத்திய நிகழ்ச்சிகளில் உங்களுடைய பேச்சை காது கொடுத்து கேட்டால் அவ்வளவு அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்போ குழந்தைகளுக்கான பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கிறீங்க...! அந்த வீடியோவில் நீங்க பேசும்போது உங்களுடைய உடல் பாகங்கள் ஒவ்வொரு ஊராக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீங்களே முதுமலை காடு உங்களுடைய எந்த பாகம் என்று நீங்க சொல்லி இருக்கீங்க? நீங்க சொல்லுற ஊரில் இருப்பவர்கள் எல்லாம் அப்போ உங்கள் உடல் பாகத்துக்கு சமமா? என்னங்க பேசி வச்சிருக்கீங்க? இப்ப இதை பற்றி நாங்க பேசினா கூட நீங்க இது எப்பவோ பேசிய வீடியோ என்று சொல்லுவீங்க. ஆனா நீங்க எல்லாம் எப்பவோ நடந்த சம்பவத்தை எல்லாம் இப்போதும் பேசிட்டு இருக்கீங்களே? அப்புறம் நீங்க பேசியதற்கு என்ன விளக்கம் சொல்ல போறீங்க என்று அந்த பெண் பேசி இருக்கிறார். ராஜ்மோகன் பேசிய நிகழ்ச்சி இப்போது நடந்தது கிடையாது. 2020 ஆம் ஆண்டு வெளியான காமிக்ஸ்டான் செம காமெடிப்பா நிகழ்ச்சியின் போது ராஜ்மோகன் காமெடி செய்த காலத்தை சேர்ந்தது. இந்த நிகழ்ச்சி இந்தியில் பிரபலமான காமிக்ஸ்டான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக உருவானது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த நிகழ்ச்சியில் ராஜ் மோகன் நடுவராகவும் இருந்தார். அப்போது அவர் புதிய காமெடியன்களுக்கு பல்வேறு வகையான காமெடி குறித்து பயிற்சியும் வழங்கி இருந்தார். குறிப்பாக ஸ்கெட்ச் காமெடி உள்ளிட்ட பிரிவுகளின் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக அப்போது அளித்த பேட்டிகளில் சொல்லியிருந்தார். அந்த பேட்டியை இப்போது எடுத்து சிலர் கலாய்த்து வரும் நிலையில், அது காமெடி நிகழ்ச்சி அப்போது காமெடியாக பேசியதை இப்போது அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் ஒரு சிலர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு ஒருவருடைய கடந்த காலத்தையும் ,பொது பேச்சுகளையும் மக்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள் என்று சொல்லி வருகிறார்கள். இப்போது அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவரது பழைய பேச்சு மீண்டும் விவாதத்திற்கு வந்திருக்கிறது.பெண் கேட்ட கேள்வி
ராஜ்மோகன் பேசிய பழைய நிகழ்ச்சி
இந்தி காமெடி நிகழ்ச்சி
ரசிகர்கள் கருத்து