சென்னை : ஒரு நிறுவனத்தின் நூற்றாண்டு பயணம் என்பது சாதாரண சாதனை கிடையாது. அப்படிப்பட்ட Essel குழுமத்தின் நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஜீ தமிழ், ஜீ திரை மற்றும் தமிழ் ஜி5 இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகம், தொலைக்காட்சி, ஊடகம் என பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.
அதில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் விஜய் ஆண்டனி, ஆர்யா, விஜயகுமார், பிரசாந்த், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றனர். இதனால் விழா தொடக்கத்தில் இருந்தே நட்சத்திர பட்டாளத்துடன் கலை கட்டியது.
விழாவில் பேசிய Essel குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, அந்த நிறுவனத்தின் நூற்றாண்டு பயணத்தை பற்றி பேசினார். 1926 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழுமம் பல்வேறு காலகட்டத்தில் சந்தித்த சவால்களை கடந்து இன்று மிகப்பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக வளர்ந்து இருப்பதை அவர் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். அதிலும் 1970 ஆம் ஆண்டு வெறும் 17 ரூபாய் முதலீடுடன் தொடங்கிய தனது தொழில் பயணம் இன்று கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் அளவிற்கு வளர்ந்து இருப்பதை நினைவு படுத்திய அவர் இந்த நீண்ட பயணத்தில் மக்களுடன் ஏற்பட்ட உறவு தான் மிகப்பெரிய பலம் என்று கூறினார். தமிழ் ரசிகர்களுக்கும் நிறுவனத்திற்கும் இருக்கும் உறவும் இந்த விழாவில் முக்கியமாக பேசினார். அதுபோல இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதும் வைரல் ஆகி வருகிறது. அதில், ஒரு நிறுவனம் 100 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவது அதன் வலிமை, தொலைநோக்கு பார்வை மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொள்ளும் திறனை காட்டுகிறது. தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக மாறினாலும் நல்ல கதைகளுக்கான மக்களின் தேடல் மட்டும் மாறாது. இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களில் இருக்கும் கதைகள், உலக அளவில் கொண்டு செல்ல முடியும் என்றும் அந்த முயற்சியில் தொடர்ந்து பங்கேடுக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதுபோல இந்த விழா வெறும் பிரபலங்களின் வருகையுடன் முடிந்து விடவில்லை. பல வருஷங்களாக ஜீ தமிழுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், தொகுப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் சீரியல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து எமோஷனலாக பேசிக்கொண்டிருந்தனர்.17 ரூபாயில் தொடங்கிய கனவு
கமல்ஹாசன் பேச்சு
பிரபலங்கள் பேச்சு