ஜீ தமிழ் சரிகமப சபேசனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யாரு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

  • சென்னை: ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியின் முதல் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்த இலங்கையை சேர்ந்த பாடகர் சபேசனுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. மணமகள் ரிக்ஷனா உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் இசை ரசிகர்களும், ஜீ தமிழ் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    சபேசன் என்ற பெயர் சரிகமப ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய பெயர் கிடையாது. குறிப்பாக அவரது குரலில் இருந்த தனித்துவமும், மேடையில் பாடும்போது காட்டிய நம்பிக்கையும் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் அவர் எனக்கு எப்போதுமே வெற்றி கிடைத்தது இல்லை என்று நெகட்டிவ் ஆகவே பேசிக் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் மட்டுமே கிடைத்து வந்தது. அது போல ரசிகர்களின் ஆதரவும் அவருக்கு அதிகரிக்க தொடங்கி விட்டது.

    Advertisement

    பாடகர் கார்த்திக் பாராட்டு

    இலங்கையை சேர்ந்த சபேசன் ஜீ தமிழில் சரிகமபா சீனியர் சீசன் 5 நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு கவனம் பெற்றார். ஆரம்பத்தில் போட்டியாளராக அறிமுகமானவர் நிகழ்ச்சி போக போக அவருடைய குரல் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு பாடகரா மாற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் அவர் பாடிய விதத்தை பார்த்து அந்த பாடலின் அசல் பாடகரும் நிகழ்ச்சியின் நடுவருமான கார்த்திக் எழுந்து நின்று பாராட்டிய தருணம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    சரிகமப ரன்னர் அப்

    குறிப்பாக உசுரே போகுது பாடலை சபேசன் பாடிய போது அதை லைவாக பாடுவது மிகவும் கடினம் என்றாலும் அதை சபேசன் சிறப்பாக பாடியதாக கார்த்திக் பாராட்டி இருந்தார். அதற்கு பிறகு சபேசனின் பயணம் இன்னும் சுவாரசியமானதாக மாறியிருந்தது. நிகழ்ச்சியின் இறுதி சுற்று வரை சென்று முதல் ரன்னர் அப் ஆக இடத்தைப் பிடித்தார். டைட்டிலை சுசாந்திகா பெற்றிருந்த நிலையில் சபேசன் 2வது இடத்தை பெற்றார். அவருக்கு 10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

    Advertisement

    சரிகம சபேசனுக்கு திருமணம்

    டைட்டில் தவறவிட்டாலும் சபேசனுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை. மாறாக இறுதிப் போட்டிக்கு பிறகு அவரது பாடல்கள் மற்றும் நிகழ்ச்சியில் அவர் கொடுத்த பர்பாமென்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன் மூலமாகவே அவருக்கு பல மேடைகளில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இப்போது அவருடைய வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரிக்ஷானா என்பவரை திருமணம் செய்துள்ள சபேசன் திருமண கோலத்தில் மணமகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தான் ரிக்ஷானாவை காதலித்து வருவதை சரிகமப நிகழ்ச்சியில் அவர் சொல்லி இருந்தார். இப்போது அவருடைய திருமண புகைப்படங்கள் வெளியானதும் தங்களுடைய வீட்டில் ஒருவருக்கு திருமணம் நடந்தது போல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

    Advertisement

    English Summary

    Zee Tamil SaReGaMaPa: Sri Lankan singer Sabesan, who captivated fans with his voice from the first show in Zee Tamil, is now married. Music fans and Zee Tamil celebs are congratulating him as he shared his wedding photos with bride Rikshana.