ஜீ தமிழ் ஹீரோவுக்கு கல்யாணம்.. ரிசப்ஷனில் குவிந்த சின்னத்திரை பிரபலங்கள்!


  • சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் விட்டல் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவருடைய திருமணம் எளிமையாக நடந்தாலும் அதில் கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்களின் வருகை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    இதயம் சீரியல் நடிகர்

    ஜீ தமிழில் ஒளிபரப்பான இதயம் சீரியலில் நடித்து பிரபலமான விட்டல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான தாயம்மாள் குடும்பத்தார் சீரியலிலும் நடித்திருந்தார். இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் பிரபலமாக இருந்தாய். இந்த நிலையில் தான் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.

    Advertisement

    சீரியல் பிரபலங்கள் திருமணம்

    இந்த திருமண ரிசப்ஷனில் ஜீ தமிழ் மற்றும் பல தொலைக்காட்சி சீரியல் பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் நேரில் வந்து புதுமண தம்பதியினரை வாழ்த்தியிருந்தனர். குறிப்பாக கூமாம்பட்டி தங்கபாண்டி மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமான ராணவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ரிஷப்ஷனில் விட்டலும் அவருடைய மனைவியும் ஒரே நிற உடை அணிந்து ரசிகர்களை கவரும் வகையில் கலக்கி இருக்கின்றனர். அதுபோல இருவரும் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படங்கள், மேடையில் அனைவரையும் வரவேற்ற காட்சிகள் என ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    விஜய் டிவி சீரியல் நடிகை திருமண

    சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருகின்றனர் சமீபத்தில்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலி சீரியல் ஹீரோவிற்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஒன்னா இருக்க கத்துக்கணும்" சீரியல் சமந்தாவிற்கும் திருமணம் நடந்தது.

    இவர்கள் இருவரும் காதலித்த விஷயம் இதுவரைக்கும் தெரியாமல் இருந்த நிலையில் திடீரென திருமண புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதேபோல விட்டல் திருமண புகைப்படங்களுக்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Zee Tamil serial Actor Vittal: Television actor Vittal, best known for his role in Zee Tamil's Idhayam, has entered a new phase of life by getting married. Though the wedding was held as a private affair, the reception witnessed the presence of several well-known television personalities from Zee Tamil and other channels. Actors including Koomampatti Thangapandi and Bigg Boss fame Ranav attended the celebration and wished the newlyweds.