கம்யூனிஸ்ட்களின் கோட்டையை தகர்த்த பாஜக மாணவர் அமைப்பு.. கேரள கல்லூரி சங்க தேர்தலில் வெற்றி

  • திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் சங்கத்தை வீழ்த்தி ஏபிவிபி வென்றுள்ளது. திருப்புனித்துறையில் உள்ள இந்த கல்லூரியில் முதல் முறையாக 4 முக்கிய இடங்களை ஏபிவிபி வென்றுள்ளது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் ஏபிவிபி மாணவர் சங்கம் தடம் பதிக்க தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உடன் தொடபுடைய மாணவர் அமைப்பான ஏபிவிபி கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதல் முறையாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மானவர் அமைப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் 3 முக்கிய பதவிகளுக்கு ஏபிவிபி அமைப்பினர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் கேரளவிலும் ஏபிவிபி கால் பதித்துள்ளது.

    Advertisement

    முதல் முறையாக தோல்வி

    கேரளம் மாநிலத்தின் எர்ணாகுளத்தில் திருப்புனித்துறை அரசு சமஸ்கிருத கல்லூரி உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ வெற்றி பெற்று வந்தது. ஆனால், முதல் முறையாக கல்லூரி யூனியனில் உள்ள ஆறு முக்கிய இடங்களை ஏபிவிபி கைப்பற்றியுள்ளது.

    இதன் மூலம் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வந்த எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பு முதல் முறையாக பாஜக ஆதரவு மாணவர் அமைப்பிடம் தோல்வியை தழுவியுள்ளது. திருப்புனிதுறையில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியிருந்தது. 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசம் இருந்த நகராட்சியை பாஜக முதல் முறையாக வென்று இருந்த நிலையில், அதே ஊரில் இருக்கும் கல்லூரி மாணவர் சங்க தேர்தலிலும் பாஜக ஆதரவு அமைப்பு தனது முத்திரையை பதித்துள்ளது.

    Advertisement

    நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது

    இந்த வெற்றி குறித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூறியதாவது:- எஸ்.எஃப்.ஐ. அமைப்பின் மாணவர் விரோதக் கொள்கைகளை மாணவர்கள் நிராகரித்ததையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கேரளாவின் பிற கல்லூரிகளில் உள்ள ஏ பி வி பி. அமைப்புகளுக்கும் இந்த வெற்றி பெரும் ஊக்கத்தை அளிக்கும். முந்தைய எஸ்.எஃப்.ஐ. தலைமையிலான மாணவர் சங்கங்கள் சமஸ்கிருத மொழியை வளர்க்கத் தவறிவிட்டது.

    மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது என்ற கேள்விகளும் உள்ளன. எஸ் எஃப் ஐ பதவியில் இருந்த போது, போதுமான அளவில் மாணவர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

    Advertisement

    மாணவர் சங்க தலைவர்

    ஸ்னிக்தா எம். ஹரி என்ற மாணவர், தலைவராகவும், ஆதித்யா டி.ஏ. துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்னேஷ் பட் பொதுச் செயலாளராகவும், விக்னேஷ் டி. மேகசின் எடிட்டராகவும் அஞ்சலி டி. கிளப் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிவேத்யா கே. என். பல்கலைக்கழக மாணவர் சங்க கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவானி ஆர். இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் பிரதிநிதியாகவும், அவனி சி. பி. இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    ABVP has won the student union election at the Government Sanskrit College in Ernakulam, defeating the Left-wing student organization. This marks the first time the ABVP has secured four key positions at this college in Thrippunithura. The ABVP's success is significant, as it signals the organization gaining a foothold in Kerala, a state traditionally considered a stronghold of the Left.