இரவில் பைகளுடன் ஓட்டம்.. இன்ஸ்ட்டா பிரபலம் அகிலின் மனைவி மேகாவின் பரபர சிசிடிவி காட்சி வெளியீடு!

  • திருவனந்தபுரம்: கேரள சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு, மிகவும் பிரபலமான வோல்கர் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் ஜோடியாக வலம் வந்தவர்கள் அகில் மற்றும் மேக. இந்திய கடற்படை வேலையைத் துறந்துவிட்டு முழுநேர கன்டென்ட் கிரியேட்டராக மாறிய அகில், தனது காதலியான மேகாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்.

    Advertisement

    ஒரே தெருவில் வசித்து, காதலித்து கரம் பிடித்த இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் "ட்ரீம் கப்ள்" ஆக திகழ்ந்தனர்.

    Advertisement

    ஆனால், கேமராவுக்கு பின்னால் இருந்த அவர்களின் நிஜ வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    #### நள்ளிரவில் நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள் அம்பலம்!

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில், அவரது மனைவி மேகா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். மனைவியைக் காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த அகில், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

    Advertisement

    சமீபத்தில் இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் வெளியாகி வேகமாக பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், மேகா நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவு வழியாக வெளியேறுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. கையில் தன்னால் முடிந்த அளவுக்கு பெரிய பைகளில் பணப் பெட்டி, விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் துணிமணிகளை எடுத்துக்கொண்டு அவர் பதற்றத்துடன் தெருவில் ஓடுகிறார்.

    சற்று தொலைவில் காத்திருந்த நபர் மேகாவின் பைகளை வாங்கிக் கொண்டு, அவரை காரில் ஏற்றிக் கொண்டு நள்ளிரவிலேயே தப்பிச் செல்கிறார். அந்த நபர் ஒரு உள்ளூர் பஸ் டிரைவர் என்பதும், இருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து இந்த ஓட்டத்திற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    மனமுடைந்த அகில்... ஆனால் காட்டிய கண்ணியம்

    சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், கணவன் உறங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் உடைமைகளை அள்ளிக்கொண்டு ஓடிய மனைவியின் இந்த செயலால் வோல்கர் அகில் கடுமையாக மனமுடைந்து போய் உள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அகில் காட்டிய கண்ணியம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

    இதுகுறித்து அகிலிடம் பேசிய அவரது நண்பரும் பிக் பாஸ் பிரபலமுமான சாய் கிருஷ்ணா கூறுகையில், அகில் மிகவும் வேதனையில் இருக்கிறார். ஆனால் அவர் யாரையும் பழிக்கவோ குற்றம் சாட்டவோ விரும்பவில்லை. போனவர்கள் போய்விட்டார்கள், கடந்த காலம் முடிந்துவிட்டது. அவளுக்கு அதுதான் சரி என்று தோன்றியிருக்கும். எனவே தயவுசெய்து அவளை யாரும் தவறாகப் பேச வேண்டாம் என்றுதான் அகில் என்னிடம் கூறினான் எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ரீல்ஸ் vs ரியாலிட்டி

    கேரளாவில் சமீபகாலமாக திருமணமான பெண்கள், குடும்பத்தை விட்டுவிட்டு உள்ளூர் பஸ் டிரைவர்கள் மற்றும் காதலர்களுடன் ஓடிப்போகும் சம்பவங்கள் ஒரு டிரெண்டாக மாறி வருவதாக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதங்கள் எழுந்துள்ளன.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களில் தம்பதிகள் காட்டும் போலி மகிழ்ச்சியையும் பெர்ஃபெக்ட் கப்ள் பிம்பத்தையும் பார்த்து ஏமாற வேண்டாம் என்பதற்கு இந்த அகில்-மேகா சம்பவமே சாட்சி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையில் காட்டப்படும் வாழ்க்கை வேறு, திரைக்கு பின்னால் இருக்கும் கசப்பான நிஜ வாழ்க்கை வேறு என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.

    English Summary

    CCTV Footage Leaked: Kerala Vlogger Akhil NRD's Wife Megha Seen Running With Bags