இந்தியாவிலேயே மிக அதிகம்.. கேரளாவில் கரப்பான்பூச்சி கட்சிக்கு எகிறிய மவுசு! கூட்டமாக சேரும் இளசுகள்

  • திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே மிக அதிகமாக கேரளாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் இணைய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. இதனால் கேரளாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கையில் அந்த கட்சி நிர்வாகிகள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

    Advertisement

    நம் நாட்டில் புதிதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' உருவாகி உள்ளது. அரசியல் கட்சியாக இன்னும் பதிவு செய்யவில்லை என்றாலும் கூட நீட் வினாத்தாள் கசிவில் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி அவரை ராஜினாமா செய்ய வைத்தது.

    Advertisement

    இதற்கு அடுத்தப்படியாக அக்டோபர் 2ம் தேதி முதல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளது. மும்பை உள்பட நாடு முழுவதும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே தான் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். கேரளா கொச்சியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று 'மீட்அப்' நடத்தினர். பத்திரிகையாளர்களை சந்தித்தனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளரும், தென்மாநில பொறுப்பாளருமான விஜய் ரெட்டி மல்லங்கி கூறுகையில், ''மகாராஷ்டிராவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் இணைய அதிகமானவர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவிற்கு இணையாக கேரளாவில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் இருந்து இணைவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    Advertisement

    இவர்கள் அனைவரையும் அக்டோபர் 2ம் தேதி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். அன்றைய தினம் மும்பை அல்லது நாட்டின் எந்த இடத்தில் நடக்கும் போராட்டத்திலும் பங்கேற்கலாம்'' என்றார்.

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் மட்டும் சுமார் 20,000 ஐடி ஊழியர்கள் இந்த கட்சியை பின்பற்ற தொடங்கினர். இணையதளங்களில் கையெழுத்திட்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்த வரவேற்பை தொடர்ந்து கேரளாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை அமைப்பு ரீதியாக விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் தொடர்புகளை அதிகரிக்கவும், மண்டல ரீதியாக பல்கலைக்கழகங்களில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும் கேரளாவில் 4 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கேரளாவில் மாணவர்களுக்கான பிரச்சனையை முன்னெடுத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி கேரளாவில் விளிம்புநிலை மாணவர்களுக்கான 'இ-கிராண்ட்' (e-grants) உதவித்தொகையைக் கோருவது போன்ற உள்ளூர் மாணவர் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவும், தேசிய அளவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா கோரியும் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி அக்டோபர் 2ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்த போராட்டத்தின்போது கேரளாவில் 20 ஆயிரம் பேரையும் களமிறக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Cockroach Janta Party in Kerala: It has come to light that, across India, youth in Kerala are showing the greatest interest in joining the Cockroach Janta Party. Consequently, party officials have begun focusing on the necessary measures to expand the Karappanpoochi Janata Party in Kerala. According to announcements made by party leaders in Kochi, the Cockroach Janta Party (CJP) has received registrations from nearly 20,000 supporters in Kerala.