கேரளாவில் நள்ளிரவில் பயங்கர விபத்து.. தமிழக என்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் பலி! ஷாக் தகவல்

  • திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். விசாரணையில் காரில் இருந்த 8 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பதும், அவர்கள் பெயர் முகவரி குறித்த அடையாளங்களும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கைப்பமங்கலம் அருகே நள்ளிரவில் பயங்கர விபத்து நடைபெற்றுள்ளது. சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து மோதியுள்ளது.

    Advertisement

    சம்பவ இடத்திலேயே 8 பேரும் உயிரிழப்பு

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 8 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர். லாரி மீது கார் மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து கிடந்தது. இதனால், தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பலியானவர்களின் உடலை மீட்டனர். தமிழக பதிவெண் கொண்ட கார் என்பதால், விபத்தில் சிக்கியவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    அதாவது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என கூறப்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 8 பேரும், காரை வெட்டிய பிறகே வெளியே எடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டது. உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    Advertisement

    விபத்தில் உயிரிழந்தவர்கள்

    1. மதுரை மேலூரை சேர்ந்த குருகுல கிருஷ்ணன் மகன் சந்தோஷ் ஜி (வயது 20).

    10/63 , சத்தியபுரம் நாவினிபட்டி, மேலூர் மதுரை மேலூரை சேர்ந்த 8531004060

    2. மதுரை விருகனூர் ராம்குமார் என்பவரின் மகன் பிரசன்னா(20).

    3.சேலம் புதுநல்லா கவுண்டர்பட்டியை சேர்ந்த வசந்த்குமார் மகன் விஸ்வா (20)

    4. திண்டுக்கல் மாவட்டம் அயனூத்து பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரது மகன் சூர்யா (20)

    5. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டம்சத்திரம் அத்திக்கோம்பை களஞ்சிப்பட்டியை சேர்ந்த ஓ கார்த்திகேயன் மகன் யுவசஞ்சித் (21)

    6. திண்டுக்கல்லை சேர்ந்த ஜான்சன் என்பவது மகன் ஜோசுவா (20) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    கார் விபத்திற்குள்ளாகும் முன்பாக கல்லூரி மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது தெரியவந்துள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளும் வெளியாகி பார்ப்போரை பதை பதைக்க வைத்துள்ளது. இது தொடர்பான செய்தியறிந்து மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டு இருப்பதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது கார் மோதியதா? அல்லது தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    எனினும் அப்பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சாலையில் இருந்து இறங்கி செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு இருந்ததாககவும், ஆனால் அது குறித்த அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால் இந்த விபத்து அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    English Summary

    A car collided with a lorry near Thrissur in Kerala, resulting in the deaths of all eight occupants at the scene. Investigations revealed that the eight individuals were students at a private engineering college in Dindigul.