பெரிதாகும் விஷயம்.. பெட்ரோலில் 31.5% எத்தனால் கலப்பு? கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் சோதனை!

  • திருவனந்தபுரம்: பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெட்ரோலில் 31.5 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது கேரள அரசும் பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நமது நாட்டில் பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பதற்கு அனுமதி உள்ள நிலையில், அதைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் நடத்திய ஆய்வில் சுமார் 30% வரை எத்தனால் கலப்பு கண்டறியப்பட்டதாக கர்நாடக அரசு கூறியது தேசியளவில் பேசுபொருளானது.

    Advertisement

    கேரளா

    இது வாகன ஓட்டிகளிடையே இடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாகனங்களின் மைலேஜ் குறைவது, பயண தூரம் குறைவது, ஓடிக்கொண்டிருக்கும்போதே வாகனங்கள் நின்றுவிடுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கர்நாடகாவை தொடர்ந்து கேரள அரசும் இந்த விவகாரத்தை விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

    சோதனை நடத்த உத்தரவு

    கேரள உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் அனூப் ஜேக்கப், பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலக்கப்படுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீத அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டதாக எந்த புகாரும். இருப்பினும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிக எத்தனால் கலப்பு தொடர்பாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கேரளாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனூப் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.

    கர்நாடகா

    முன்னதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநிலம் முழுவதும் 67 இடங்களில் பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக, 31.5 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்களை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் மட்டுமின்றி, எத்தனால் கலக்கும் மற்றும் சப்ளை செய்யும் இடங்களிலும் ஆய்வுக் குழுக்களை அனுப்பினோம். முழுமையான அறிக்கை சீக்கிரமே வெளியிடப்படும்.

    Advertisement

    வாகனங்களின் மைலேஜ் குறைவது, குறைந்த தூரத்திலேயே எரிபொருள் தீர்ந்துவிடுவது, பயணத்தின்போது வாகனங்கள் நின்றுவிடுவது என ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது" என்று அவர் தெரிவித்தார். கர்நாடக அரசு இன்றைய தினம் முழு அறிக்கையை வெளியிடம் என தெரிகிறது.

    பெட்ரோலிய நிறுவனங்கள்

    மறுபுறம் அதிக எத்தனால் கலப்பை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துள்ளன. பெட்ரோல் மாதிரிகளை சோதனை செய்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் தங்களிடம் உரிய தகவல் அளிக்காமல் சோதனைகள் நடத்தப்பட்டதாக பெட்ரபோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அந்த விளக்கத்தில், "பெட்ரோல் மாதிரிகளை சேகரிப்பதில் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. சோதனை முறையாக நடத்தப்படவில்லை என்பதால் அந்த முடிவுகளை ஏற்க முடியாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Kerala has ordered petrol sample tests in four districts following allegations of excess ethanol blending in Karnataka(பெட்ரோல் எத்தனால் கலப்பு கேரளா): Ethanol in Petrol latest news in tamil.