திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள். கோயிலுக்கு செல்வதற்கு முன்பே விர்ச்சுவல் கியூவில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே இந்தப் பதிவை முடித்துவிட வேண்டும். இந்த முன்பதிவுக்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் கிடையாது. இலவசமாகவே செய்துகொள்ளலாம்..!!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் வந்தால், பம்பை மற்றும் சன்னிதானம் செல்லும் வழிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படியொரு சிக்கலை தவிர்க்கவே விர்ச்சுவல் கியூ முறையை கேரள போலீசாரும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் எந்த நாளில் எத்தனை பேர் தரிசனத்துக்கு வருகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப பக்தர்களை அனுமதிக்கவும் முடியும். பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 70,000 பேருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால், பக்தர்களின் வருகையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறலாம். சில குறிப்பிட்ட இடங்களில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது. சபரிமலைக்கு செல்ல விரும்புபவர்கள் https://sabarimalaonline.org/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். இதற்கான ஆப் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். முதலில் செல்போன் நம்பர் அல்லது இ-மெயில் அட்ரஸை கொடுத்து கணக்கை தொடங்க வேண்டும். பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, அடையாள அட்டை தொடர்பான தகவல்களையும் போட்டோவையும் அப்லோடு செய்ய வேண்டும். அடுத்ததாக எந்த நாளில் தரிசனம் செய்ய விரும்புகிறோம், எந்த நேரத்தில் செல்ல முடியும், எந்த வழியாகச் செல்லப் போகிறோம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். விருப்பமான நேரத்தில் இடம் கிடைத்தால் முன்பதிவை உறுதி செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். 5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி அல்லது கல்லூரி அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு விர்ச்சுவல் கியூ முன்பதிவு தேவையில்லை. அவர்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு முடிந்ததும் பக்தர்களின் கைபேசிக்கு QR குறியீடு வழங்கப்படும். இதை தரிசனத்துக்கு செல்லும்போது தவறாமல் வைத்திருக்க வேண்டும். பம்பை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் போலீசார் இந்த குறியீட்டை சரிபார்ப்பார்கள். அப்போது முன்பதிவு செய்தபோது பயன்படுத்திய அசல் அடையாள அட்டையையும் காண்பிக்க வேண்டும். செல்போனிலுள்ள க்யூ.ஆர் குறியீடு மட்டும் போதாது. ஒரிஜினல் அடையாள அட்டையையும் எடுத்து செல்ல வேண்டும். அதனால் சபரிமலைக்கு செல்ல தயாராகும் பக்தர்கள் கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே இந்த நடைமுறையை முடித்துக்கொள்ள வேண்டும். முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்க்கலாம்...!!விர்ச்சுவல் கியூ எதற்கு?
முன்பதிவு செய்வது எப்படி?
அடையாள அட்டைகள்
சபரிமலை அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம்.. திருவிதாங்கூர் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
QR குறியீடு முக்கியம்