திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சுமதி என்ற பெண் பலியாகி உள்ளனர். இந்த நிலச்சரிவில் வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பது தொடர்பாக பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில், நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் இன்று காலையும் மழை தொடர்ந்து வருகிறது. விடியவிடிய மழை வெளுத்து வாங்கி வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்து.
பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம், கேட்டயம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் பெய்த கனமழையின காரணமாக முட்டம் பகுதியில் உள்ள செல்லவயல் மற்றும் அடூர்மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்துடன், நிலச்சரிவு நடந்ததால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் செல்லவயல் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் நுழைந்தால் மக்கள் அவதியடைந்தனர். அதேபோல் நெல்லபாரா, கரின்குனனம் உள்ளிட்ட இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் 4 இடங்களிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மாறாக இடுக்கி மாவட்டம் குடயாத்தூரில் வார்டு 7 ல் அமைந்துள்ள மஷிக்கல்லல் பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண் பலியாகி உள்ளார். அவரது உடல் இன்று காலை 7 மணிக்கு மீட்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதை பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் நிலவும் மழையால் கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோிழக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் மழை தொடர்வதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.