120 கி.மீ வேகம்.. புது காரில் கேரளா சென்ற திண்டுக்கல் மாணவர்கள்! வெளிவந்த தகவல்! லாரி டிரைவர் எங்கே?

  • திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்த 8 மாணவர்களும் பலியாகினர். இந்த கோர விபத்து தொடர்பாக பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் 120 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டதும், பாலத்தின் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் காரணமாகவே இந்த 8 பேர் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள PSNA என்ஜினியரிங் கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் 7 பேர் மற்றொரு கல்லூரி மாணவர் ஒருவர் என மொத்தம் 8 பேர் கேரளாவில் நடந்த கார் விபத்தில் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பாக பல அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளன.

    Advertisement

    சம்பவ இடத்திலேயே பலி

    கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி பெற்றோரிடம் கோவை செல்வதாக கூறிவிட்டு கல்லூரி மாணவர்கள் 8 பேர் புது கார் ஒன்றில் கேரளாவின் குருவாயூர் சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். பின்னர் திருச்சூர் அருகே கொடுங்காலூர் அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். நள்ளிரவு கைத்தமங்கலம் பகுதியில் சென்ற கார் மேம்பாலம் ஒன்றில் ஏறி இறங்கியுள்ளது. இறங்கும் போது அதிவேகமாக வந்தது.

    அப்போது அந்த சாலையின் வலதுபக்கம் தார்ப்பாய் மூடியபடி லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிமுகம் இல்லாத சாலை என்பதாலும், வேகமாக கார் வந்ததாலும் காரை ஓட்டிய மாணவர் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்படியே லாரியின் உள்ளே புகுந்தது. கோர விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. கடைசி சீட்டில் இருந்த மாணவர் மட்டுமே உயிருடன் இருந்துள்ளார். மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    120 கிமீ வேகத்தில் சென்ற கார்

    ஆனால் அந்த நபரும் போலீசார் மீட்பதற்குள் உயிரிழந்துவிட்டார். இந்த சோக சம்பவத்திற்கு கார் 120 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. பாலத்தில் இருந்து இறங்கும் போது கார் அதிவேகமாக 120 கிமீ ஸ்பீடில் இயக்கப்பட்டதாகவும், அப்போது சாலையின் வலது பக்கம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை காரை ஓட்டியவர் கவனிக்காததும் காரணமாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே காரில் இருந்த ஏர் பேக்குகளும் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. ஏர் பேக்குகள் ஓப்பன் ஆகும் முன்பே கார் சின்னாபின்னமாகி உருக்குலைந்துவிட்டது.

    Advertisement

    லாரி டிரைவர் எங்கே?

    எனினும் விபத்திற்கு முக்கிய காரணமாக அந்த பாலத்தின் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி தான். அதுவும் சாலையின் வலதுபக்கத்தில் அந்த கனரக லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. பாலத்தின் அருகே எந்த வித கனரக வாகனமும் நிறுத்தப்படக் கூடாது என்ற விதி இருந்தும் அதனை மீறி இந்த லாரி நிறுத்தப்பட்டதே 8 பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த லாரி டிரைவர் எங்கே? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    லாரி டிரைவர் ஏன் அங்கே நிறுத்தினார்? ரோந்து சென்ற போலீசார் விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதனை செய்ய போலீசார் தவறிவிட்டதாகவும், அவர்களது அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேரிட்டது எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Kerala car crash Eight students lost their lives when their car collided with a lorry near Thrissur, Kerala. Several shocking details regarding this tragic accident have emerged; it has been revealed that the car was traveling at a speed of 120 km/h, and the fatalities were caused by a lorry parked on the road near a bridge.