ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான்

  • திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் கேரளாவின் நிதி நிலைமை தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கேரளாவின் கடன் தொகை ரூ.5.07 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் கடன் சுமையை விட சுமார் ஐந்தரை லட்சம் கோடி குறைவாகும். இந்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்கள் வருமாறு:

    Advertisement

    கேரளாவில் கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி செய்தது. இந்த 10 ஆண்டுகளும் கேரளா முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்தார். இந்நிலையில் தான் ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    Advertisement

    காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா முதல்வராக விடி சதீசன் பொறுப்பேற்றார். விரைவில் கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவின் நிதி நிலைமை தொடர்பாக இன்று சட்டசபையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கேரளா முதல்வர் விடி சதீசன் தான் இந்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இந்த வெள்ளை அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புக்கு நடுவே தாக்கலான வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் வருவாய், கடன் சுமை, வட்டி தொகை உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கேரளாவின் மொத்த கடன் சுமை ரூ.5.07 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் செலவு, பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகள் ம்றும் மூதலதன செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பெரும் சவால் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் (TRR) 77 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட செலவினங்களுக்கு செல்கிறது. 20.9 சதவீத வருவா் வட்டி செலுத்துவதற்காக போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளா மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மூலதன செலவு வெறும் 1.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.

    கேரளா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு 2021-22 நிதியாண்டில் ரூ.31,571 கோடியாக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் ரூ78,851 கோடியாக அதிகரித்துள்ளது.
    கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) நிதி நிலையும் கவலையளிக்கிறது. இந்த வாரியத்திற்கு ரூ.21,000 கோடி கடன் உள்ளதாடு ,ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி இல்லை. முந்தைய நிர்வாகத்திடமிருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உட்பட பிற வகைகளில் ரூ.48,733 கோடி செலுத்தப்படாமல் உள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் கடன் சுமை பத்தரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் கேரளாவின் கடன் சுமை ரூ.5.07 லட்சம் கோடியாக தான் உள்ளது. இதனால் தமிழகத்தை பொறுத்தவரை கேரளா குறைந்த கடன் சுமையை பெற்றுள்ளது.

    English Summary

    Kerala debt details in White Paper: The Congress party has assumed power in Kerala following its victory in the State Assembly elections. Against this backdrop, a White Paper regarding Kerala's financial status was tabled today. The report states that Kerala's total outstanding debt stands at ₹5.07 lakh crore. This figure is approximately Rs.5.5 lakh crore lower than Tamil Nadu's debt burden. Other details outlined in this White Paper are as follows.