பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை.. உலகக்கோப்பை கால்பந்து ஃபைனலையொட்டி கேரள அரசு அறிவிப்பு

  • திருவனந்தபுரம்: இன்று நள்ளிரவு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து ஃபைனலில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசன், கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) விடுமுறை அறிவித்துள்ளார்.

    Advertisement

    பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெறுகிறது. இன்று இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. இதையொட்டி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான கண்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு வசதியாக, கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) முதல்வர் வி.டி.சதீசன் விடுமுறை அறிவித்துள்ளார்.

    நள்ளிரவில் தொடங்கும் போட்டி வழக்கமான நேரத்தில் முடிந்தால் கூட அதிகாலை 2:30 மணி ஆகும், பரிசு வழங்கும் விழா முடிய 3 மணி ஆகிவிடும். ஒருவேளை போட்டி கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்றால் அதிகாலை வரை நீடிக்கும். இதனால் மாணவர்கள் தூக்கமில்லாமல், பள்ளிக்கு வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

    Advertisement

    கால்பந்து ரசிகர்கள், குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள், விடுமுறை கோரி சமூக வலைதளத்தில் விடுத்து வந்த தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, திங்கட்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்குமாறு சிபிஎம் தலைவரும் முன்னாள் கேரளக் கல்வி அமைச்சருமான வி. சிவன்குட்டி மாநில அரசை வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீன் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சர் என்.சம்சுதீன் வெளியிட்ட அந்தப் பதிவில், "இப்போது மகிழ்ச்சியா, குழந்தைகளே?.. கால்பந்து விளையாட்டு ஆர்வலர்களான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரள பொதுக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்ளுக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Kerala Chief Minister VD Satheesan has declared Monday (July 20, 2026) a holiday for educational institutions, including professional colleges, on account of the FIFA World Cup finals.