திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசுத் தொகை ரூ.20 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு ரூ.30 கோடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் லாட்டரி டிக்கெட்டின் பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.450 ஆகும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கேரளாவில் தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரிகள் விற்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி சீசனுக்கு ஏற்றபடி வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பூஜா பம்பர் லாட்டரி விற்பனையாகி வருகிறது. இதன் குலுக்கல் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதே நாளில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் தொடங்க உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியில்தான் முதல் பரிசுத் தொகை இதற்கு முன்பு ரூ.20 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் முதல் பரிசு ரூ.30 கோடியாக உயரத்தப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ் பம்பர் டிக்கெட் பரிசும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.20 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு முதல் ரூ.5 கோடி பரிசு உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.450 ஆகும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. பரிசுகள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.124.01 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. டிக்கெட்டுகள் எண்ணிக்கையும் அதிகரிக்க கேரள லாட்டரித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 12 சீரியஸ்களில் மொத்தம் 1.08 கோடி டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன. ஓணம் பம்பரில் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு அனைத்தும் விற்பனையான நிலையில் கிறிஸ்துமஸ் பம்பரிலும் டிக்கெட் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூ.25 கோடி மட்டுமின்றி, இரண்டாவது பரிசும் 24 பேருக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்பட உள்ளது. மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சம் 24 வின்னர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. 4-வது பரிசாக ரூ.5 லட்சம் 24 வின்னர்களுக்கு கிடைக்கும். 5-வது பரிசாக ரூ.1 லட்சம் 108 பேருக்கு வழங்கப்படும். 11 டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசும் அளிக்கப்படும். முதல் பரிசு ரூ.25 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளதால் கேரள லாட்டரி பிரியர்களுக்கு இந்த டிக்கெட் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லாட்டரியில் பம்பர் வென்று நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என பகல் கனவு காண தொடங்கிவிட்டனர். இதற்கிடையே, கேரள லாட்டரிகளை ஆன்லைனில் வாங்க கூடாது என்று லாட்டரி இயக்குநர் இன்பசேகர் எச்சரித்துள்ளார். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது சட்ட விரோதம் என்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்களிடம் இருந்து பிரிண்ட் டிக்கெட் மட்டுமே வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சமீப காலமாக கேரள மக்கள் இடையே லாட்டரிகள் மீதான மோகம் அதிகரித்து இருப்பதால் டிக்கெட் விற்பனை அங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை ஈடுகட்டவும், லாட்டரி பிரியர்களை கவரவும் இந்த பரிசுத்தொகை உயர்வை கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் தங்கியுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநில மக்களும் அதிக ஆர்வம் காட்டுவதே டிக்கெட் விற்பனை உயர்வுக்கு காரணம் என்று லாட்டரி வியாபாரிகள் சொல்கிறார்கள். லாட்டரிகள் தடை செய்யப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.ரூ.25 கோடியாக அதிகரிப்பு
Pooja Bumper: கேரள லாட்டரி பிரியர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்! வந்தாச்சு பூஜா பம்பர்! ரூ.12 கோடியை அள்ளப் போவது யார்?
1.08 கோடி டிக்கெட்டுகள்
24 பேருக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு
Kerala Lottery: கேரளாவில் போலி லாட்டரியா? கொல்லத்தில் ஒரே எண்ணில் 2 லாட்டரி டிக்கெட்டுகள்! சேட்டன்கள் அதிர்ச்சி!
பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது ஏன்?