Kerala Lottery: கேரள ஓணம் பம்பரில் 30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி! பரிசு வென்றவர் ரகசியம் காப்பதால் நீடிக்கும் சஸ்பென்ஸ்

  • திருவனந்தபுரம்: ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று நடந்த நிலையில் முதல் பரிசு ரூ.30 கோடி TL 360615 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. யார் இந்த டிக்கெட்டை வாங்கினார் என்பது இதுவரை ரகசியமாக உள்ளது. லாட்டரியை வாங்கியவர் வெளி மாநிலத்தவராக இருக்க வாய்ப்பு குறைவு என்று லாட்டரியை விற்பனை செய்தவர் தரப்பில் கூறப்பட்டாலும் அதை அடியோடு மறுப்பதற்கு இல்லை என்ற பேச்சும் நிலவுகிறது.

    Advertisement

    கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. முதல் பரிசு ரூ.30 கோடி என்பதால் கேரளாவில் இந்த லாட்டரிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த இரு மாதங்களாக பரிசு வெல்லும் கனவுடன் இருந்த லாட்டரி பிரியர்களுக்கு நேற்று அதிர்ஷ்ட எண் என்ன என்பது தெரியவந்தது.

    Advertisement

    வடகலஞ்சேரி சுஜித்

    குலுக்கலில் TL 360615 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கலில் உள்ள முத்து ஏஜென்சியில் இருந்து தம்புரானில் உள்ள சப் ஏஜெண்ட் ஆன வடசராஜன் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து வடகலஞ்சேரி பகுதியை சேர்ந்த சுஜித் என்ற சிறு லாட்டரி வியாபாரி 30 டிக்கெட்டுகளை வாங்கி விற்றுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பரிசு விழுந்த லாட்டரியாகும்.

    இதனால், இந்த டிக்கெட்டை வாங்கி சென்றது யார் என்பது இன்னும் கண்டறிய முடியவில்லை. வழக்கமாக பம்பர் பரிசு அடித்தவர்கள் மறுநாளே லாட்டரி அலுவலகத்திலோ. வங்கிகளிலோ சமர்பிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பம்பரில் பரிசு வென்றவர் இதுவரை ரகசியம் காப்பதால் கேரள சேட்டன்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Advertisement

    அதிர்ஷ்டசாலி யார்?

    30 கோடி பரிசு என்பதால், தனது அடையாளம் வெளியே தெரிந்தால், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து தொல்லைகள் வரும் என்பதால், பரிசு வென்றவர் ரகசியம் காப்பதாகவும், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பரிசுத்தொகையை வாங்கி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கேரள லாட்டரி பிரியர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

    லாட்டரியை வாங்கியவர் வெளி மாநிலத்தவராக இருக்க வாய்ப்பு குறைவு என்று லாட்டரியை விற்பனை செய்தவர் தரப்பில் கூறப்பட்டாலும் அதை அடியோடு மறுப்பதற்கு இல்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எனவே ஒருவேளை வெளி மாநிலத்தவர் யாராவது டிக்கெட்டை வாங்கியிருந்தால் ஓரிரு நாட்கள் கழித்தே பரிசுத் தொகையை உரிமை கோர வருவார்கள் என்பதால், நாளை அல்லது அதற்கு அடுத்த நாட்களில் யார் பரிசு வாங்கியது என்று தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    எந்தனை நாட்களுக்குள் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும்?

    ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்றவருக்கு 30 கோடியில் கிட்டத்தட்ட பாதி அளவிலான தொகை வரியாக போய்விடும். டிடிஎஸ், ஏஜெண்ட் கமிஷன், செஸ் வரி ஆகியவை பிடித்தது போக ரூ.15.50 கோடி அளவிற்கே கையில் கிடைக்கும் என லாட்டரிதுறை அதிகாரிகள் சொல்கிறார்கள். குலுக்கல் நடைபெற்ற 30 நாட்களுக்குள் பரிசுத்தொகையை உரிமை கோர வேண்டும்.

    இல்லையென்றால் டிக்கெட் கையில் இருந்தாலும் பரிசுத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு அடித்து இருந்தால் அவர்கள் கேரளாவில் வந்து டிக்கெட்டை வாங்கியதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியிருந்தால் பரிசுத்தொகை மறுக்கப்படும்.

    English Summary

    Kerala Lottery Onam Bumper; Following the Onam Bumper lottery draw held yesterday, the first prize of ₹30 crore has gone to ticket number TL 360615. The identity of the person who purchased the ticket remains a secret. Although the seller suggests it is unlikely the buyer is from another state, there is still speculation that such a possibility cannot be entirely ruled out.