Kerala lottery: முதல் நாளே இப்படியா? கேரள ஓணம் பம்பர் டிக்கெட்! ஆடிப்போன கேரள லாட்டரித்துறை

  • திருவனந்தபுரம்: நாட்டிலேயே அதிக முதல் பரிசுத் தொகையாக ரூ.30 கோடி கேரளாவின் ஓணம் பம்பர் லாட்டரியில் வழங்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.25 கோடி என்று இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் அறிமுகம் செய்த முதல் நாளிலேயே கேரள லாட்டரித்துறையை வியக்க வைக்கும் அளவில் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் நாள் விற்பனையை விட இந்த ஆண்டு கூடுதலாக 5.54 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாம்.

    Advertisement

    கேரளாவில் திருவோணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விற்பனை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. நாட்டிலேயே அதிக பரிசுத்தொகை கொண்ட லாட்டரி ஓணம் பம்பரே ஆகும். இதுவரை ரூ.25 கோடி முதல் பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.30 கோடியாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    முதல் நாளிலேயே விற்பனை அதிகம்

    இதனால், கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த டிக்கெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தப்பித்தவறி பரிசு அடித்தால் ஓவர் நைட்டில் வாழ்க்கை மொத்தமாக மறிவிடுமே என்ற ஆசையில் லாட்டரியை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும்.

    இந்த நிலையில், விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 8.72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை வெறும் 3.17 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதை விட 5.54 லட்சம் டிக்கெட்டுகள் முதல் நாளிலேயே விற்றுள்ளது.

    Advertisement

    ஓணம் பம்பர் குலுக்கல் எப்போது?

    குலுக்கல் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. குலுக்கலுக்கு சரியாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அச்சிடப்பட்ட மொத்த டிக்கெட்டுகள் (90 லட்சம்) விற்பனையாகிவிடும் என எதிர்பார்ப்பதாக கேரள லாட்டரி வியாபாரிகள் மத்தியில் நம்பிக்கை தெரிவித்தனர். முதல் கட்டமாக 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டது என்று கேரள லாட்டரி துறை இயக்குனநர் அஞ்சு கே எஸ் தெரிவித்தார். வழக்கமாக கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் தான் டிக்கெட் விற்பனை அதிகமாக இருக்கும்.

    இந்த முறையும் பாலக்காடு பகுதியிலேயே அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லாட்டரி பிரியர்கள் கூறியிருக்கிறார்கள். கடந்த 16 ஆம் தேதி கேரள முதல்வர் வி.டி சதீசன் இந்த லாட்டரி டிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தார். கேரள மாநிலத்தை பொறுத்தவரை சுற்றுலாவுக்கு பெயர் போன மாநிலமாக உள்ளது. கேரளாவில் காணக்கூடிய இயற்கை சார்ந்த சூழலை கண்டு ரசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    Advertisement

    தினசரி ரூ.1 கோடி முதல் பரிசு

    இதனால், வெளி மாநிலத்தவர்களும் சிலர் லாட்டரிகளை ஆர்வத்துடன் வங்குவதை பார்க்க முடிகிறது. இதனால், கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சக்கை போடு போடுகிறது. அந்த மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும் லாட்டரி உள்ளது. பம்பர் லாட்டரிகள் மட்டுமின்றி இங்கு தினம் தோறும் 50 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. பல லட்சம் மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அதில் வருவாய் ஈட்டுவதா என்ற எதிர்ப்புகளும் கேரளாவில் உள்ளன.

    Disclaimer: லாட்டரி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. லாட்டரி பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்றால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

    English Summary

    Kerala Lottery: The first prize for Kerala's Onam Bumper lottery has been raised from ₹25 crore to ₹30 crore this year. Sales have been remarkably brisk since the very first day of the ticket's launch, surprising the Kerala State Lottery Department. Compared to the opening day of sales for last year's Onam Bumper lottery, an additional 5.54 lakh tickets have been sold this year.