Kerala lottery: ஓணம் பம்பர் ரூ.30 கோடி! ஒரு வழியாக பரிசுத்தொகையை வாங்கி சென்ற அதிர்ஷ்டசாலி! இவ்வளவு நாள் வராதது ஏன்?

  • திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் (Kerala lottery) முதல் பரிசு ரூ.30 கோடியை வென்ற அதிர்ஷடசாலி ஒருவழியாக வந்து பரிசுத் தொகையை வாங்கி சென்றுள்ளார். தன் அடையாளத்தை காட்ட விரும்பாத அவர் ரகசியமாக இந்த பரிசுத் தொகையை வாங்கி சென்றுள்ளார். இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக ஓணம் பம்பர் லாட்டரி வின்னர் யார் என நீடித்து வந்த சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துள்ளது.

    Advertisement

    கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக தவித்துக்கொண்டிருந்த கேரள லாட்டரி பிரியர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

    Advertisement

    முதல் பரிசு ரூ.30 கோடி

    கடந்த மாதம் 26 ஆம்தேதி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.30 கோடி ஒரு நம்பருக்கு வழங்கப்படும். அதன்படி, TL 360615 என்ற எண்ணிற்கு முதல் பரிசு விழுந்தது. பரிசு விழுந்த டிக்கெட் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலிபரம்பாவில் விற்பனை செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. பரிசு விழுந்த டிக்கெட்டை வாங்கியது யார் என்பது தெரியாமல் இருந்து.

    Kerala Onam Bumper: ஓணம் பம்பரில் 25 கோடி வாங்கி 4 வருஷம் ஆச்சு.. இன்னும் என் கஷ்டம் தொடருது! வேதனையை பகிர்ந்த அனூப்
    Advertisement

    கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பரிசு வென்றவர், டிக்கெட்டுடன் பரிசுத்தொகை உரிமை கோராமல் இருந்தார். இதனால், லாட்டரியை தொலைத்துவிட்டாரா? அல்லது வெளி மாநில தொழிலாளி யாரேனும் வாங்கிவிட்டு பரிசு விழுந்தது தெரியாமல் உள்ளார்களா? என பல யூகங்கள் கேரளாவில் கொடி கட்டி பறந்தன.

    ரகசியமாக வாங்கி சென்றார்

    ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் இனிமேல் அதிர்ஷ்டசாலி டிக்கெட் உடன் வரும் வாய்ப்பு குறைவுதான் என கேரள லாட்டரி பிரியர்கள் பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீர் திருப்பமாக லாட்டரியில் பரிசு வென்றவர் டிக்கெட் உடன் வந்து பணத்தை பெற உரிமை கோரியிருக்கிறார். தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கூறி ரகசியமாக பரிசுத்தொகையை வாங்கிவிட்டு சென்றுள்ளாராம்.

    Advertisement

    30 கோடி முதல் பரிசு என்பதால் பணம் அடித்தது தெரியவந்தால் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர் தெரியாதவர் என பலரும் தன்னிடம் வந்து உதவி கேட்டுதொல்லை செய்வார்கள் என்று கருதிய அந்த நபர் யாருக்கும் தெரியாமல் வாங்கி சென்று இருக்கிறார்.

    இவ்வளவு நாள் வராதது ஏன்?

    இவ்வளவு நாட்களாக ஏன் டிக்கெட் வாங்க வரவில்லை என்பதற்கு பதில் கூறிய அந்த நபர், ஊடக வெளிச்சம் அதிகம் இருந்ததாலும், டிக்கெட்டை கொடுத்து பரிசுத்தொகை பெற ஒரு மாத கால அவகாசம் இருப்பதாலும் பொறுமையாக வாங்க நினைத்தேன். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வளவு நாள் பொறுமையாக இருந்ததாகவும் கூறி சென்றார்.

    Advertisement
    Kerala Lottery: கேரள லாட்டரிகளுக்கு மத்திய அரசு செக்! பரிசுத்தொகையில் வரும் பெரிய மாற்றம்.. கொந்தளிக்கும் சேட்டன்கள்

    தற்போது 30 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி, முதல் பரிசை வாங்கி சென்று இருப்பதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள லாட்டரி பிரியர்கள் இடையே நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

    கையில் எவ்வளவு கிடைக்கும்?

    முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு ரூ.30 கோடியில் 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக பிடித்தம் செய்யப்பட்டும். சற்றேறக்குறைய சுமார் 16 கோடி அளவுக்கு தான் வங்கி கணக்கில் பரிசுத்தொகை வந்து சேரும். பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார்? சாமானிய நபரா? இல்லை.. வசதி படைத்தவரா? ஏற்கனவே பரிசு வென்றவரா? என எந்த விவரமும் தெரியாமல் போனதால் கேரள லாட்டரி பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    அனூப் கொடுத்த அட்வைஸ்

    கேரள லாட்டரியில் பரிசு வெல்பவர்கள் இதுபோல தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மறுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பரிசுத்தொகையை பலர் வாங்கி சென்றுள்ளனர்.

    Lottery: கடவுள் கண்ணை திறந்துட்டார்! இந்திய பெண்ணுக்கு லாட்டரியில் அடித்த யோகம்.. ரூ.58 கோடி பரிசு மழை

    கடந்த 2022 ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலியான அனூப் 25 கோடி வாங்கிய பிறகு உறவினர்கள், நண்பர்கள் தொல்லை தாங்காமல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். பரிசு வெல்பவர்கள் யாரும் விளம்பரப்படுத்தாதீர்கள் என்று அட்வைஸும் செய்து வந்தார்கள்.

    English Summary

    Kerala lottery: The lucky winner of the ₹30 crore first prize in the Kerala Onam Bumper Lottery has finally come forward to claim the prize money. Wishing to remain anonymous, the winner collected the amount discreetly. This brings an end to the suspense that had persisted for over a week regarding the identity of the Onam Bumper Lottery winner.