Kerala Lottery: கேரளாவில் போலி லாட்டரியா? கொல்லத்தில் ஒரே எண்ணில் 2 லாட்டரி டிக்கெட்டுகள்! சேட்டன்கள் அதிர்ச்சி!

  • திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே எண்ணில் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது லாட்டரி பிரியர்கள் மத்தியிலும், ஏஜெண்ட்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் எல்லையோர மாவட்டமான கொல்லத்தில்தான் இந்த குளறுபடி நடந்துள்ளது.

    Advertisement

    ரூ.1 கோடி முதல் பரிசுத்தொகை கொண்ட 'ஸ்த்ரீ சக்தி' லாட்டரியின் குலுக்கல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற நிலையில், 'ஸ்த்ரீ சக்தி' லாட்டரியில் ஒரே எண்ணில் இரண்டு டிக்கெட்டுகளை ஏஜெண்ட் கண்டறிந்துள்ளார்.

    Advertisement

    ஒரே நம்பரில் இரண்டு டிக்கெட்டுகள்

    கேரளாவின் டீசென்ட் ஜங்ஷனில் உள்ள மீனாட்சி லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் லாட்டரி கடை வைத்து இருப்பவர், ஆட்டுக்கல் ஏஜென்சியிடம் இருந்து வாங்கிய டிக்கெட்டுகளை சரிபார்த்து கொண்டு இருந்த போது ஒரே எண்ணில் இருந்து இரண்டு டிக்கெட்டுகள் இருப்பதை கவனித்துள்ளார்.

    Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்

    இந்த டிக்கெட் மாவட்ட கருவூலத்தில் இருந்து வாங்கியது என்றும் கூறப்படுகிறது. நேற்று முன் தினமும் குந்தாரா செருமுடுல்லாவில் உள்ள 'அகி லாட்டரி ஏஜென்சி'யிலும் இதே போல புகார் எழுந்ததாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுவும், 'ஸ்த்ரீ சக்தி' லாட்டரிச் சீட்டுகளில் ஒரே எண்ணில் இரண்டு டிக்கெட்டுகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், மறுநாளே மீண்டும் ஒரே எண்ணில் 2 டிக்கெட்டுகள் கிடைத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை லாட்டரி பிரியர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    லாட்டரி துறையிடம் புகார்

    இது தொடர்பாக லாட்டரி விற்பனையாளர் சந்தோஷ் லாட்டரி துறையிடம் புகாரளித்துள்ளார். மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து 300 டிக்கெட்டுகள் வாங்கியதாகவும், அந்த டிக்கெட்டுகளுக்காக பில் தயாரித்துக்கொண்டு இருந்த போது ஒரே எண்ணில் 2 டிக்கெட்டுகள் இருந்ததை கண்டறிந்ததாகவும் அவர் கூறினார். லாட்டரி இயக்குநருக்கும், மாவட்ட அதிகாரிக்கும் இரண்டு டிக்கெட்டுகளின் நகல்களுடன் புகாரை அளித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் ரொம்பவே பிரபலம். திரும்பிய பக்கமெல்லாம் அங்கு லாட்டரி கடைகளை பார்க்க முடியும். மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. தினமும் ஒரு கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி பரிசு அளிக்கப்படுகிறது.

    Advertisement

    கேரள சேட்டன்கள் ஆதங்கம்

    அதிகபட்சமாக ஓணம் பம்பருக்கு முதல் பரிசு ரூ.30 கோடி ஆகும். ஒரே டிக்கெட்டில் வாழ்க்கையே மாறிவிடும் என்பதால், பலரும் கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டு கேரள லாட்டரிகளை வாங்கி வருகிறார்கள். தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி வாங்குவதற்கு என்றே மெனக்கெட்டு போகிறவர்கள் கூட பார்க்க முடியும்.

    Kerala Lottery: கேரள லாட்டரியில் முதல் 3 பரிசுகளை அப்படியே அள்ளிய பாலக்காடு! ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

    இதனால், கேரள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. இந்த சூழலில், கேரள அரசு அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளிலேயே இத்தகைய குளறுபடி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட்டுகளில் மோசடி எதுவும் நடைபெறுகிறதா? என்றும் கேரள சேட்டன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே தமிழகம் போன்ற வெளிமாநிலங்களில் கள்ளச்சந்தையில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரும் நிலையில், இந்த சம்பவம் லாட்டரி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்பதால் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள சேட்டன்கள் கோரியுள்ளனர்.

    English Summary

    Kerala Lottery: In Kerala, the printing and sale of two lottery tickets bearing the same number has caused a major shock among lottery enthusiasts and agents alike. This mix-up occurred in Kollam, a district located near the border with Tamil Nadu.