Kerala Lottery: கேரள லாட்டரி ரூ.12 கோடி.. தமிழருக்கு விழுந்ததா பரிசு? கொல்லத்திற்கு கொட்டிய யோகம்!

  • திருவனந்தபுரம்: கேரளா விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று நடைபெற்றுள்ளது. ரூ.12 கோடி முதல் பரிசு என்பதால் பரிசு யாருக்கு விழும் என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் இருந்து வந்தனர். இதில் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு VB 135452 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி அடித்துள்ளது. அனில் என்ற ஏஜெண்ட் இந்த டிக்கெட்டை விற்றுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் தமிழர்கள் யாரும் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இரண்டாவது பரிசு ரூ.1 கோடி 6 பேருக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசு ரூ.10 லட்சம் 6 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    Advertisement

    நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. லாட்டரி டிக்கெட்டுகளால் ஏழை எளிய மக்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை இழந்து நிம்மதியை தொலைத்ததால், தமிழ்நாட்டில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரிக்கு அரசு தடை விதித்துள்ளது.

    கேரள விஷு பம்பர் லாட்டரி குலுக்கல்

    இருந்தாலும் கேரளாவில் மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் மட்டுமின்றி வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளின் குலுக்கலும் நடைபெறுகிறது. சீசனுக்கு ஏற்றார் போல் பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விஷு பம்பர் டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    Advertisement

    இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.12 கோடியாகும். கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விற்பனை 44 லட்சத்தை தாண்டியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 11,55,210 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.

    தமிழருக்கு அடித்துள்ளதா?

    கடந்த ஆண்டு விற்பனை 42,87,350 டிக்கெட்டுகள் விற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லம் மாவட்டத்தில் விற்கப்பட்ட VB 135452 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.

    Advertisement

    கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது. அனில் என்ற ஏஜெண்ட் இந்த டிக்கெட்டை விற்றுள்ளார். தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் தமிழர்கள் யாரும் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் பரிசாக ரூ.12 கோடி மட்டுமின்றி இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி ஆறு டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசு ரூ.10 லட்சம் 6 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு ரூ.5,000, ரூ.2,000, ரூ.1000, ரூ.500, ரூ.300 போன்ற குறைந்த அளவிலான பரிசும் வழங்கப்படுகிறது.

    Advertisement

    கடந்த ஆண்டு எந்த ஊருக்கு அடித்தது?

    கடந்த ஆண்டு விஷு பம்பர் லாட்டரியில் VD 204266 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்து இருந்தது. கோழிக்கோட்டில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்து இருந்தது. எனவே இந்த ஆண்டு எந்த ஊரில் வாங்கிய டிக்கெட்டிற்கு அடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் இருந்தனர்.

    கேரளாவில் தமிழக எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில்தான் அதிக முறை பரிசு அடித்து இருப்பதாக கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பேசப்படும் நிலையில், இந்த முறையும் அங்குதான் பரிசு அடிக்குமா? இல்லை வேறு ஊர்களில் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுமா? என ஆர்வத்துடன் காத்திருந்தனர் கேரள லாட்டரி பிரியர்கள்.

    English Summary

    Kerala Lottery: Kerala Lottery: Vishu Bumper Did a Tamil Nadu Native Win the Rs 12 Crore Jackpot? Kollam Gets Lucky . Kerala Vishu Bumper Lottery Draw Today: The much-awaited Kerala Vishu Bumper Lottery draw is set to take place today in Thiruvananthapuram. With a massive first prize of Rs 12 crore, lottery enthusiasts across Kerala are eagerly waiting to know the lucky winner. The second prize of Rs 1 crore will be awarded to six winners, while six tickets will receive Rs 10 lakh as the third prize.