திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி ஒருவேளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பரிசுத்தொகையை பெற்றுவிட வேண்டும் என்று அமைதியாக உள்ளாரா? அல்லது டிக்கெட் எதுவும் மிஸ் ஆகிவிட்டதா? ஒரு வேளை வெளி மாநில தொழிலாளர்கள் யாரேனும் டிக்கெட்டை வாங்கிட்டு பரிசு விழுந்ததே தெரியாமல் உள்ளார்களா? அல்லது டிக்கெட்டை தொலைத்துவிட்டார்களா? என்ற பேச்சு கேரள சேட்டன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் லாட்டரி பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் சனிக்கிழமை ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் TL 360615 என்ற எண்ணுக்கு முதல் பரிசான ரூ.30 கோடி அடித்தது.
கேரள லாட்டரி வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான் என்பதால், இந்த டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி என்ற எதிர்ப்பார்ப்பு கேரள மக்கள் மத்தியில் அதிகரித்தது. வழக்கமாக பம்பர் பரிசு வென்றவர்கள் குலுக்கல் முடிந்த மறுநாளே டிக்கெட்டை லாட்டரி அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து பரிசுத்தொகை உரிமை கோருவதை பார்க்க முடியும். ஆனால், ஓணம் பம்பர் டிக்கெட் வாங்கிய நபரோ தற்போது வரை பரிசுத்தொகையை உரிமை கோர வரவில்லை. சக்கரக்கல் தாலுகாவில் உள்ள தம்புரான் லாட்டரி ஏஜென்சியிடம் இருந்து லாட்டரியை வாங்கிய எம்.வி சுஜித் என்பவர் விற்பனை செய்த லாட்டரிக்குதான் முதல் பரிசு விழுந்துள்ளது. சுஜித் என்பவர் மொத்தம் 30 டிக்கெட்டுகளை வாங்கி விற்ற நிலையில், அதில் ஒன்றுதான் பரிசு அடித்த டிக்கெட் என்று கூறியிருந்தார். அந்த டிக்கெட்டை வாங்கியது யார் என்பதுதான் தற்போது மர்மாக உள்ளது. டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி ஒருவேளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பரிசுத்தொகையை பெற்றுவிட வேண்டும் என்று அமைதியாக உள்ளாரா? அல்லது டிக்கெட் எதுவும் மிஸ் ஆகிவிட்டதா? என்ற பேச்சு கேரள சேட்டன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வழக்கமாக பம்பர் லாட்டரியில் பரிசு வென்றவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க தங்கள் அடையாளத்தை மறைப்பார்கள். பரிசு வெல்பவர்கள் அடையாளம் வெளிப்படுத்த வேண்டாம் என்று கேரள லாட்டரித்துறைக்கு கோரிக்கை விடுத்தால், அவரை பற்றிய விவரங்கள் கேரள அரசால் மறைக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் அடையாளத்தை மறைப்பதற்காக இத்தனை நாட்கள் பரிசுத்தொகை உரிமை கோராமால் இருக்கிறா? என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருவேளை வெளி மாநில தொழிலாளர்கள் யாரேனும் டிக்கெட்டை வாங்கிட்டு பரிசு விழுந்ததே தெரியாமல் உள்ளார்களா? அல்லது டிக்கெட்டை தொலைத்துவிட்டார்களா? என கேரள லாட்டரிபிரியர்கள் கடந்த ஒரு வார காலமாக சினிமாவை மிஞ்சும் வகையில் கற்பனை குதிரையை ஓட விட்டு கொண்டு இருக்கிறார்கள். லாட்டரியை பொறுத்தவரை குலுக்கல் முடிந்த 30 நாட்களுக்குள் உரிமை கோரினால் மட்டுமே பரிசு வழங்கப்படும். 30 நாட்களுக்கு மேல் தாண்டினால் தாமதத்திற்கான வலுவான காரணங்கள், அதற்கான சான்றுகள் என ஏகப்பட்ட விதிமுறைகளுடன் பரிசுத்தொகை கொடுக்கப்படும். அதிகபட்சம் 90 நாட்களுக்கு மேல் போனால் டிக்கெட் கையில் இருந்தாலும் பரிசுத்தொகை வாங்க முடியாது. கேரள பம்பர்களில் டிக்கெட் உரிமை கோரப்படாமல் வெற்றியாளர் தெரியாத நிலை இதற்கு முன்பு பலமுறை இருந்துள்ளது.சுஜித் விற்ற டிக்கெட்டுக்கு தான் பரிசு
அடையாளத்தை மறைப்பதற்காக
டிக்கெட்டை தொலைத்துவிட்டார்களா?