கேரளாவில் 60 வருஷமாக லாட்டரி வாங்கும் முதியவர்.. இதுவரைக்கும் 2 கோடி காலி.. அப்பவும் திருந்தலயே!

  • திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி பிரியரான முதியவர் ராகவன் என்பவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக டிக்கெட்டுகளை வாங்கி வருகிறாராம்.. தனக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறப்பாள் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன், இதுவரை ரூ.2 கோடிக்கும் மேல் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய டிக்கெட்டுகளை சேகரித்தால் 5 மூட்டைகள் சேர்ந்துள்ளதாம்.

    Advertisement

    இவ்வளவு டிக்கெட்டுகள் வாங்கியும் அவருக்கு சில ஆயிரம் மட்டுமே இதுவரை பரிசு அடித்துள்ளது. இதனால் லாட்டரி வாங்கும் பழக்கத்தை இனியாவது மறப்பாரா என்றால், திருந்தாமல் இன்னும் நிறைய டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறாராம்.

    Advertisement

    லாட்டரி வாங்கிய பணத்திலேயே கோடீஸ்வரர் ஆகியிருக்கலாம்

    லாட்டரியில் நமக்கும் பணம் அடிக்கும்.. கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவோம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு அதில் பணத்தை இழந்தவர்கள்தான் அதிகம். யாரோ ஒருவருக்கு பணம் அடிக்க பல லட்சம் பேர் டிக்கெட் வாங்கி ஏமாறுவார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் ஆசை யாரை விட்டது என்பது போல லாட்டரி மோகத்தில் பணத்தை இழந்தாலும் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்குபவர்களை பார்க்க முடிகிறது.

    லாட்டரி வாங்கிய பணத்தை சேர்த்து வைத்து இருந்தால் கூட இன்று கோடீஸ்வரர் ஆகியிருக்கலாமே என்று வேடிக்கையாக லாட்டரி பிரியர்களை கலாய்க்கும் நிகழ்வுகளும் நடக்கும்.. உண்மையில் அப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கேரளாவில் ஒரு முதியவரின் கதை அமைந்துள்ளது. அப்படி என்னதான் அந்த முதியவர் செய்தார் என்பது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    Advertisement

    1967-இல் இருந்து லாட்டரி வாங்குகிறாராம்

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் அருகே உள்ள பாலக்குன்னு என்ற பகுதியில் வசித்து வருபவர் பிபி ராகவன். சொந்தமாக தோட்டம் வைத்து இருந்த பிபி ராகவன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு லாட்டரி மீது தீராத மோகம் இருந்துள்ளது. அதிர்ஷ்ட தேவதை என்றாவது நம் வீடு தேடி வருவாள்.. ஒரே நாளில் டாப்பிற்கு போயிரலாம் என்று லாட்டரிகளை வாங்கி குவித்து இருக்கிறார். 1967-ம் ஆண்டில் இருந்து லாட்டரியை வாங்க தொடங்கிய பிபி ராகவன், ஆரம்பத்தில் பூடான் லாட்டரிகளை வாங்கியுள்ளார்.

    Advertisement

    பம்பர் பரிசு அடிக்கும் என லாட்டரியை வாங்கிவிட்டு பகல் கனவு கண்டுகொண்டு சுற்றி வந்த ராகவனுக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். ஆனலும் எனக்கு லாட்டரி அடித்தே தீரும் என்று லாட்டரி டிக்கெட்டுகளை தினம் தோறும் வாங்கி குவித்துள்ளார். இதுவரை வாங்கிய டிக்கெட்டுகளை தனது வீட்டில் சாக்கு மூட்டைகளில் கட்டிப்போட்டுள்ளார். அந்த அளவு லாட்டரியை வாங்கி குவித்தாலும் இவருக்கு கடைசி வரை ஒரு பம்பர் கூட கிடைக்கவில்லையாம்.

    ஊரெங்கும் கடன்

    இது குறித்து வேதனையுடன் பேசிய ஆகவன், இதுவரை வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளை மூட்டை பைகளில் கட்டிப்போட்டுள்ளேன். லாட்டரிகள் மட்டும் 5 மூட்டைகளில் மட்டும் சேர்ந்துள்ளது. ரூ.2 கோடிக்கு இதுவரை லாட்டரி வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் மூன்று முறை ரூ.4 ஆயிரம் மட்டுமே பரிசாக அடித்து இருக்கிறது. தோட்டத்தில் கிடைத்த வருவாயில் லாட்டரிகளை வாங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் தோட்டத்தை விற்க வேண்டிய நிலை வந்தது. அப்போதும் கடன் வாங்கி லாட்டரி டிக்கெடுகளை வாங்கினேன்..

    Advertisement

    மனைவியின் நகையை விற்று டிக்கெட் வாங்கினேன். ஊரெங்கும் கடன் அதிகரித்ததால் உறவினர்கள் விலகினர். இப்போது மனைவியுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறேன்" என்றார். இதில் ஹைலைட் என்னவென்றால் இவ்வளவு பட்டாலும் ராகவன் திருந்தியபாடில்லை. என்றாவது எனக்கு அதிர்ஷ்டம் அடித்தே தீரும் என்று தற்போதும் லாட்டரிகளை வாங்கி வருகிறாராம்.

    லாட்டரி என்ன மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்

    இதுவரை லாட்டரி வாங்கி 2 கோடி ரூபாயை வீணடித்த தொகையை சேமித்து வைத்து இருந்தாலே அவர் தற்போது எங்கேயோ போயிருப்பார். ஆனால் அதிர்ஷ்டத்தை நம்பி அனைத்தையும் இழந்து நிற்கிறார். "லாட்டரியால் என்ன பாதிப்பை ஏழைகள் சம்பாதிப்பார்கள் என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்" என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்

    English Summary

    Kerala man has been buying lottery tickets for over 60 years, spending nearly ₹2 crore in the process. Despite his persistence, he has won only a few thousand rupees and continues to buy lottery tickets.