ரூ.10 கோடி.. கொட்டப்போகுது யோகம்! கேரளம் மான்சூன் பம்பர் லாட்டரி.. ஆசையோடு காத்திருக்கும் சேட்டன்கள்

  • திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது விஷு பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. வரும் 23 ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் நிலையில் அடுத்ததாக மான்சூன் பம்பர் லாட்டரி விற்பனையை கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். மொத்தம் 45 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன.

    Advertisement

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மநில அரசே அச்சிட்டு டிக்கெட் விற்பனையை செய்து வருகிறது. தற்போது விஷு பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ.12 கோடி முதல் பரிசுத்தொகை கொண்ட இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

    Advertisement

    கேரள லாட்டரி டிக்கெட்

    வாழ்க்கையில் நமக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆவலில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். குலுக்கலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு இறுதி கட்ட சேல்ஸ் சூடுபிடித்துள்ளது. வழக்கம் போல பாலக்காடு மாவட்டம்தான் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்கள் இருக்கும் என்று கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவை பொறுத்தவரை சீசனுக்கு ஏற்றபடி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படும். தற்போது பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில், மான்சூன் லாட்டரியை கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். மொத்தம் 45 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன.

    Advertisement

    மொத்தம் 80.35 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. MA, MB, MC, MD மற்றும் ME என ஐந்து சீரிஸ்களில் டிக்கெட்டுகள் விற்பனையாக உள்ளன. ரூ.30.85கோடிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. பல்வேறு பரிவுகளின் கீழ் மொத்தம் 3.05 லட்சம் டிக்கெட்டுகளுக்கு பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடி மட்டுமின்றி இரண்டாவது பரிசு ரூ. 10 லட்சம் அளிக்கப்படுகிறது.

    குலுக்கல் எப்போது நடைபெறும்?

    மொத்தம் 5 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். இதுபோக, 5 ஆயிரம், ஆயிரம், ரூ.500 மற்றும் ரூ.250 ஆகிய தொகையிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. டிக்கெட்டிற்கான குலுக்கல் திருனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகமான கோர்க்கி பவனில் நடைபெறும். குலுக்கல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கேரள லாட்டரித்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    Disclaimer: லாட்டரி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. தமிழகத்தில் லாட்டரி விற்பனைகளுக்கு சட்டப்பூர்வ தடை உள்ளது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்வது குற்றம் ஆகும். மீறி விற்பனை செய்தால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யும் லாட்டரிகளுக்கு கேரள அரசு பரிசுத்தொகையை வழங்க மறுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Kerala government has officially announced the Monsoon Bumper Lottery with a massive first prize of Rs 10 crore. The ticket costs Rs 250, and around 45 lakh tickets will be printed. The announcement has created huge excitement among lottery enthusiasts across Kerala.