ரூ.10 கோடிங்க.. லட்டு மாறி தூக்கியது யார்? கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி அதிர்ஷ்ட எண்கள் வெளியானது

  • திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரு மாதங்களாக அனல் பறக்க விற்பனை செய்யப்பட்டு வந்த மான்சூன் பம்பர் லாட்டரி (Kerala Monsoon Bumper Lottery) டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. ரூ.250 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.10 கோடியாகும். இதனால் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் தங்கள் டிக்கெட் நம்பர்களை பார்த்தபடி இருந்தனர். இந்த நிலையில் முதல் பரிசு ரூ.10 கோடி ”MC 576896” என்ற எண்ணுக்கு அடித்துள்ளது.

    Advertisement

    கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த இரு மாதங்களாக நடந்து வந்தது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. MA, MB, MC, MD ME ஆகிய ஐந்து சீரியஸ்களில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. டிக்கெட் வாங்கிய பல ஆயிரம் கேரள லாட்டரி பிரியர்களும் தங்களுக்கு பரிசு அடித்துவிடாதா? என்ற ஏக்கத்துடன் டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கினர்.

    Advertisement

    இன்று குலுக்கல் என்பதால் பலரும் கடிகாரத்தையும் தங்கள் டிக்கெட் எண்களையும் பார்த்தபடி இருந்தனர். சரியாக பிற்பகல் 2 மணிக்கு இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் தொடங்கிய சில நிமிடங்களில் வின்னர் யார்? என்ற விவரம் தெரிந்தது.

    அதாவது பலரும் எதிர்பார்த்த மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் வின்னர் ”MC 576896” என்ற எண் தான். முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் இந்த தொகை யாருக்கு அடித்துள்ளது என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

    Advertisement

    முதல் பரிசு ரூ.10 கோடி விழுந்தது இந்த ஊரில் தான்

    முதல் பரிசு ரூ.10 கோடி கண்ணூரில் விற்கப்பட்ட MC 576896 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது.

    ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் முதல் பரிசு அடித்த அதே எண்ணிற்கு வேறு சீரியசில் உள்ள டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். MA 576896, MB 576896, MD 576896, ME 576896 ஆகிய டிக்கெட் எண்களுக்கு ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்

    MA 530984, MB 884378, MC 351820, MD 557299, ME 685578

    Advertisement

    மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்

    MA 816079, MB 725332, MC 504425, MD 323192, ME 739809

    நான்காம் பரிசு ரூ.3 லட்சம்

    MA 838733, MB 509385, MC 254807, MD 536900, ME 535035

    ஐந்தாம் பரிசு ரூ. 5,000:

    லாட்டரியில் கடைசி 4 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதன்படி, 3068, 4936, 0966, 0774, 2196, 5123, 3632, 6730, 7939, 1478, 5226, 6507, 5522, 3175, 8802, 6743, 8497, 9760 ஆகிய எண்கள் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அடித்துள்ளது.

    Advertisement

    டிக்கெட்டின் பரிசு விவரம்

    முதல் பரிசு - ரூ.10 கோடி
    2 வது பரிசு - ரூ.10 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு)
    3 வது பரிசு - ரூ.5 லட்சம் ( 5 டிக்கெட்டுகளுக்கு)
    4 வது பரிசு - ரூ.3 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு)
    5 வது பரிசு - ரூ. 5 ஆயிரம்
    6 வது பரிசு - ரூ.1,000
    7 வது பரிசு - ரூ.500
    8 வது பரிசு - ரூ.250

    ஆறுதல் பரிசு 4 டிக்கெட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    ரிசல்ட் பார்ப்பது எப்படி?

    கேரள லாட்டரி பிரியர்கள் தங்களுக்கு பரிசு கிடைத்து இருக்கிறதா என்பற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேரள லாட்டரி இணையதளம் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். கேரள லாட்டரி துறையின் மொபைல் செயலியிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    பரிசு வென்றால் பெறுவது எப்படி?

    பரிசு அடித்த டிக்கெட்டின் அசலுடன் லாட்டரி அலுவலகம் அல்லது தேசிமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைவான பரிசுத் தொகை என்றால் தாங்கள் வாங்கிய லாட்டரி கடைகளிலேயோ, அல்லது வேறு லாட்டரி கடைகளிலேயே டிக்கெட்டை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    அதற்கு மேல் உள்ள பரிசுத்தொகை என்றால் தேவையான அடையாள விவரங்கள் , பரிசுத்தொகையை உரிமை கோருவதற்கான பிற ஆவணங்களுடன் லாட்டரி அலுவலகத்தை நாட வேண்டும். தேவையான வெரிபிகேஷன் நடைமுறைகளுக்கு பிறகு பரிசுத்தொகை வங்கி வாயிலாக வழங்கப்படும்.

    Disclaimer

    லாட்டரி விளையாடுவது அதற்கு அடிமையாக்க கூடும். வெறும் தகவலகாக மட்டுமே இந்த செய்தி தரப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையை ஒன் இந்தியா ஊக்கப்படுத்தவில்லை. தமிழத்தில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ தடை உள்ளது. கேரள லாட்டரியின் பரிசுத்தொகை உள்ளிட்ட விவரங்களை லாட்டரி துறையின் இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

    English Summary

    Kerala Monsoon Bumper Lottery draw will be held today, offering a first prize of Rs 10 crore. Thousands of ticket holders are eagerly awaiting the results, hoping to win the bumper jackpot and other attractive cash prizes announced by the Kerala Lottery Department.