10 கோடி அள்ளப்போவது யார்? கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி.. பாலக்காட்டில் அனல் பறக்குதாம்

  • திருவனந்தபுரம்: கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் சீட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள். இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும். இரண்டாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.10 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.

    Advertisement

    கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை சூடுபறக்கிறது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதமே இருப்பதால் டிக்கெட் விற்பனை மெல்ல மெல்ல அனல் பறக்க தொடங்கியுள்ளதாக கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது.

    Advertisement

    கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்துகிறது. அந்த மாநிலத்தின் பெருமளவு வருவாய் லாட்டரி விற்பனை மூலமே நடக்கிறது. அங்கு நாள்தோறும் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது. அதுபோக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என கணக்கிட்டு சீசனுக்கு ஏற்றார்போல் பம்பர் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த டிக்கெட்டுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது கேரளாவில் பருவமழைக்காலம் என்பதால் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இந்த டிக்கெட்டிற்கான விற்பனை தொடங்கியது. ரூ.250 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி கிடைக்கும். இரண்டாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.10 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. நான்காவது பரிசாக ரூ. 3 லட்சம் 5 டிக்கெடுகளுக்கு அளிக்கப்படும்.

    Advertisement

    குலுக்கல் எப்போது நடைபெறும்?

    5-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது கடைசி 4 டிஜிட்ககளுக்கான குலுக்கல் ஆகும். மொத்தம் 30 முறை குலுக்கல் நடைபெறும். 6 வது பரிசாக 1,000- ரூபாயும், 7-வது பரிசாக ரூ.500ம், 8-வது பரிசாக ரூ. 250ம் பரிசாக அளிக்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 18/07/2026 அன்று நடைபெறுகிறது.

    ஒரு மாதமே இன்னும் இருப்பதால் டிக்கெட் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எனினும், முந்தைய பம்பர்களை விட டிக்கெட் விற்பனை கொஞ்சம் மந்தம் அடைந்து இருப்பதாகவே லாட்டரி வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேற்காசிய போரால் ஏற்பட்ட சிலிண்டர் தட்டுப்பாடு போன்றவற்றால், கேரளாவில் தங்கியிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். கேரள லாட்டரிகளை வாங்குபவர்களில் கணிசமான எண்ணிக்கையில் புலம் பெயர் தொழிலாளர்களும் உள்ளனர்.

    Advertisement

    பாலக்காடில் படு ஜோராக விற்பனை

    இதனால், டிக்கெட் விற்பனை கொஞ்சம் குறைந்துவிட்டதாகவும், 1 கோடி பரிசு தொகை கொண்ட தினசரி லாட்டரி டிக்கெட் விற்பனையும் முன்பை விட சரிந்துள்ளதாக லாட்டரி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். எனினும், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், டிக்கெட் விற்பனை வேகமெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    வழக்கம் போல இந்த முறையும் பாலக்காடு மாவட்டத்தில்தான் மான்சூன் பம்பர் டிக்கெட்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக லாட்டரி வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வாழ்நாளில் தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆசையில் கேரள லாட்டரி பிரியர்களும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

    Advertisement

    Disclaimer: லாட்டரி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. லாட்டரிகள் நிதி இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு சட்டப்பூர்வ தடை உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். காவல்துறை கைது நடவடிக்கையும் எடுப்பார்கள். கள்ளசந்தையில் வாங்கிய டிக்கெட்டிற்கு கேரள அரசு பரிசுத்தொகையும் அளிக்காது.

    English Summary

    Kerala Monsoon Bumper Lottery: Sales of the Monsoon Bumper Lottery in Kerala have picked up significant momentum. With a first prize of ₹10 crore on offer, lottery enthusiasts are snapping up tickets in large numbers. Each ticket is priced at ₹250. The second prize offers ₹10 lakh each to five winning tickets, while the third prize awards ₹5 lakh each to another five tickets.