திருவனந்தபுரம்: கேரள லாட்டரி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு திருவோணம் பம்பர் (BR-111) லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.30 கோடி அறிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில், முதல் பரிசான ரூ.30 கோடியை வென்ற டிக்கெட் எண் எது என்பது அதிகாரப்பூர்வமாக வெளியானது. அந்த அதிர்ஷ்ட எண் TL 360615 ஆகும்.
இந்த மெகா பரிசு விழுந்த டிக்கெட், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கல் பகுதியில் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த ரூ.30 கோடியை அள்ளிய அந்தப் பெரு அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மக்கள் மத்தியில் இப்போது இருக்கும் ஒரே கேள்வி, "யார் அந்த கோடீஸ்வரர்?" என்பதுதான்.
சக்கரக்கல் சார்-பதிவாளர் அலுவலகம் அருகே இயங்கி வரும் 'முத்து லாட்டரி ஏஜென்சி'யில் இருந்துதான் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சியின் உரிமையாளர் அனீஷ் எம்.வி. கடந்த 18 ஆண்டுகளாக லாட்டரி தொழில் செய்து வரும் அனீஷுக்கு, கண்ணூர் பகுதியில் 4 மொத்த விற்பனை கடைகளும் 2 சில்லறை கடைகளும் உள்ளன. அனீஷுக்கு இது முதல் முறை அல்ல.. இதற்கு முன்பு வந்த கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முதல் பரிசு டிக்கெட்டும் இவரது கடையில்தான் விற்பனையானது. இப்போது மீண்டும் ரூ.30 கோடி பம்பர் டிக்கெட் இவர் மூலம் விற்றிருப்பதால் அவரது கடைக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் பரிசு விழுந்ததன் மூலம், முகவர் கமிஷனாக 12 சதவீதத் தொகை, அதாவது ரூ.3.60 கோடி அனீஷுக்கு கிடைக்க உள்ளது. தலச்சேரி மற்றும் தளிப்பரம்பா பகுதிக்கு அனுப்பிய கட்டுகளில் இருந்து இந்த டிக்கெட் விற்றிருக்கலாம் என அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். லாட்டரி துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்கள் கணினி முறைப்படி டிக்கெட் எந்தக் கடையில் விற்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆனால், இதுவரை வெற்றியாளர் எங்களை நேரடியாகவோ அல்லது மாவட்ட அலுவலகங்களையோ தொடர்பு கொள்ளவில்லை. பரிசைப் பெற 30 நாட்கள் அவகாசம் உண்டு. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்கு பயந்து அவர் வரத் தயங்கலாம் அல்லது நேரடியாக வங்கி மூலம் டிக்கெட்டை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கலாம்" என்று கூறியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வாங்கிய சீட்டுகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டால், பதற்றப்படாமல் உடனடியாக சில எளிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: 1. டிக்கெட்டைப் பத்திரப்படுத்துங்கள்: வெற்றி பெற்ற டிக்கெட்தான் உங்கள் அடையாளம். அது கிழியாமல், தண்ணீரில் நனையாமல் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். 2. பின்பக்கத்தில் கையொப்பம் இடுங்கள்: டிக்கெட்டின் பின்பகுதியில் உங்கள் முழுப் பெயர், முகவரி ஆகியவற்றை எழுதி கையொப்பமிட வேண்டும். இது வேறொருவர் அந்த டிக்கெட்டை உரிமை கோருவதைத் தடுக்கும். 3. நகல் (Photocopy) எடுங்கள்: டிக்கெட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையில் உடனே ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 4. அரசிதழைச் சரிபாருங்கள்: அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ கெஜட் முடிவுகளைப் பார்த்து எண்களை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யுங்கள். முடிவு வெளியான 30 நாட்களுக்குள் டிக்கெட்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ரூ.1 லட்சம் வரையிலான சிறிய பரிசுகளை உள்ளூர் லாட்டரி அலுவலகத்திலேயே எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கோடிக்கணக்கிலான பம்பர் பரிசைப் பெற சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். விண்ணப்பப் படிவம்: பரிசுக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை முழு விவரங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அரசு அதிகாரி சான்றொப்பம்: வெற்றி பெற்ற டிக்கெட்டின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்களிலும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி ஒருவரிடம் கையொப்பம் பெற வேண்டும். புகைப்படங்கள்: வெற்றியாளரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (அதிகாரி அல்லது நோட்டரியால் சான்றளிக்கப்பட்டது). ரசீது படிவம்: லாட்டரி இணையதளத்தில் கிடைக்கும் படிவத்தில் ரூ.1 வருவாய் முத்திரை ஒட்டி, எழுத்துப் பிழையின்றி அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அடையாள அட்டை: பான் (PAN) கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தின் நகல். கூட்டு உரிமை ஆவணம்: ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பணம் போட்டு டிக்கெட் வாங்கியிருந்தால், அவர்களில் ஒருவர் பணத்தைப் பெற அதிகாரம் அளிக்கும் ரூ.50 முத்திரைத்தாள் ஒப்பந்தம் தேவை. சிறுவர்கள் பெயரில் இருந்தால்: டிக்கெட் வாங்கியவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், சட்டப்பூர்வ பாதுகாவலர் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அரசு அலுவலகத்திற்கு நேரில் செல்ல பயப்படுபவர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் டிக்கெட்டை ஒப்படைக்கலாம். வெற்றியாளர் வங்கிக்கு வழங்கும் அதிகாரப் பத்திரம் பரிசுத் தொகையைப் பெறும் வங்கியின் சான்றிதழ். இவற்றை வங்கி அதிகாரிகள் நேரடியாக மாநில லாட்டரி இயக்குநரகத்திற்கு அனுப்பி, வரி பிடித்தம் போக மீதிப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நிச்சயமாக முடியும். கேரள லாட்டரி சட்டப்படி வெளிமாநில மக்களும் பரிசைப் பெற முழு உரிமை உண்டு. ஆனால், அவர்கள் சில கூடுதல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆன்லைன் டிக்கெட் செல்லாது: கேரள லாட்டரியை இணையதளம் வழியாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ வெளிமாநிலங்களுக்கு விற்க சட்டத்தில் இடமில்லை. எனவே, நீங்கள் கேரளாவுக்கு நேரில் சென்று வாங்கியிருக்க வேண்டும் அல்லது எல்லைப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்டிடம் வாங்கியிருக்க வேண்டும். பயணச் சான்று: டிக்கெட் வாங்கிய காலகட்டத்தில் நீங்கள் கேரளாவுக்குப் பயணம் செய்ததற்கான ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட் அல்லது அங்கு தங்கிய ஹோட்டல் பில் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பிடச் சான்றிதழ்: நீங்கள் சொந்த மாநிலத்தில் வசிப்பதற்கான கிராம நிர்வாக அதிகாரி (VAO) அல்லது தாலுகா அலுவலகம் வழங்கிய இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate) அளிக்க வேண்டும். வங்கி விவரம்: பணம் வரவு வைக்கப்பட வேண்டிய உங்கள் ஊர் வங்கிக் கிளையின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் சான்றிதழ் தேவை. கேரள லாட்டரி துறை விதித்துள்ள 30 நாள் அவகாசத்திற்குள் அந்த அதிர்ஷ்டசாலி தனது அசல் டிக்கெட்டுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.30 கோடி விழுந்த அந்த அதிர்ஷ்டசாலி சக்கரக்கல் உள்ளூர் நபரா அல்லது வெளியூர் பயணியா என்ற உண்மை விரைவில் வெளிவரும்!இரட்டை அதிர்ஷ்டம் அடித்த லாட்டரி ஏஜென்ட் அனீஷ்
நீங்கள்தான் அந்த வெற்றியாளரா? உடனே செய்ய வேண்டியவை
தேவையான முக்கிய ஆவணங்கள்
வங்கி மூலம் சமர்ப்பிக்கும் வழிமுறை
வங்கியில் டிக்கெட்டைக் கொடுக்கும்போது:
வங்கியே லாட்டரி துறையிடம் பேசி பணத்தை வசூலித்துக் கொள்ளும் அனுமதிப் படிவம்.தமிழ்நாடு போன்ற வெளிமாநிலத்தவர்கள் பரிசு வாங்க முடியுமா?